Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் டாப் உளவு அதிகாரி ஒரு இஸ்ரேல் ஏஜெண்ட்.. வேலையை காட்டிய மொசாட் உளவாளிகள்! அதிர வைக்கும் தகவல்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் உளவாளிகள் ஈரானின் உளவு படையில் டாப் அதிகாரிகளாகக் கூட இருப்பதாக ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களை இந்த அதிகாரிகளே திருடி இஸ்ரேலுக்கு அளித்ததாகவும் அவர் பரபர குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வராமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது.

israel middle east hezbollah

அடுத்த கட்டமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை மீதும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் இப்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

பரபர குற்றச்சாட்டு: இதற்கிடையே ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது இஸ்ரேல் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஈரான் நாட்டின் டாப் உளவு படைத் தலைவராகக் கூட இஸ்ரேல் உளவாளி ஒருவர் தான் இருந்ததாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த காலங்களில் நடந்த செயல்களைக் கவனித்தாலே இது நமக்குப் புரிந்துவிடும் என்ற அவர், 2021 இறுதியிலேயே ஈரான் நாட்டில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கவனிக்கும் நாட்டின் மிக மூத்த அதிகாரியாக இருந்தவரே மொசாட் (இஸ்ரேல் உளவு படை) ஏஜெண்ட் என்பது தெளிவாகிவிட்டதாக அஹ்மதிநெஜாட் கூறியிருக்கிறார்.

உளவாளிகள்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஈரான் நாட்டிற்குள்ளேயே இஸ்ரேல் ஒரு சிக்கலான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஈரானில் நடக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் அவர்களால் எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்காணிக்கும் டாப் அதிகாரி பொறுப்பில் இருந்தவரே ஒரு இஸ்ரேல் மொசாட் ஏஜெண்ட் தான்.

இது மட்டும் இல்லை.. இப்போதும் கூட ஈரான் உளவு படையில் டாப் பொறுப்பில் குறைந்தது 20 மொசாட் ஏஜெண்டுகள் இருப்பார்கள். இஸ்ரேல் நடவடிக்கையை இவர்கள் தான் கவனிக்கிறார்கள். நிலைமை இப்படி இருந்தால் நமது பாதுகாப்பு எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்..

கொலைகள்: இந்த டபுள் ஏஜெண்டுகள் தான் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த முக்கியமான தகவல்களை இஸ்ரேலுக்குக் கொடுத்துள்ளார்கள். 2018இல் ஈரானின் அணுசக்தி ஆவணங்கள் திருடப்பட்டதில் இவர்கள் பங்கு இருக்கிறது" என்றார். மேலும், ஈரான் நாட்டை சேர்ந்த பல அணு ஆயுத விஞ்ஞானிகளையும் இவர்கள் கொன்றுள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

"ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கங்கள் டார்கெட்.." முழு படையை இறக்கிய இஸ்ரேல்.. தகிக்கும் மத்திய கிழக்கு


கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான இடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஈரான் நாட்டில் உள்ள மொசாட் ஏஜெண்ட் தான் நஸ்ரல்லா இருப்பிடம் குறித்த தகவலைப் பகிர்ந்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், இப்போது ஈரான் முன்னாள் அதிபரும் இந்த பகீர் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மொசாட் உளவு படை: அதேநேரம் மொசாட் உளவு படை குறித்து அஹ்மதிநெஜாட் எச்சரிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டில் அஹ்மதிநெஜாட் மொசாட் படை ஊருடுவல் குறித்து எச்சரித்திருந்தார். அதில் அவர், "கடந்த 10 ஆண்டுகளில் மொசாட் படை பல அரசு துறைகளில் ஊடுருவியுள்ளது.. நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் தங்கள் உயிருக்கு அஞ்சும் அளவிற்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+