For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக் மார்க்கெட்டில் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குதல்.. 60 பேர் உடல் சிதறி சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக்கில் மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 60 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கின் வடமேற்கு பகுதியிலுள்ள ஷியைட் மாகாணத்திலுள்ளது சட்ர் சிட்டி. நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மிக நெருக்கத்திலுள்ள நகரம் இது.

இந்நகரிலுள்ள காய்கறி மார்க்கெட் சுற்றுவட்டாரத்தில் பிரபலமானது. எனவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்று காலையும், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி திடீரென பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது.

லாரி முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்ப செய்து தீவிரவாதிகள் அதை வெடிக்க செய்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில், மார்க்கெட்டில் இருந்த சுமார் 60 அப்பாவி மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஷியைட் மாகாணத்தில் இதற்கு முன்பு இதேபோல நடந்த தாக்குதல்களின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அல்லது, சன்னி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் ஏதாவது பொறுப்பேற்றுக்கொண்டது என்பது நினைவிருக்கலாம்.

English summary
At least 60 people were killed and 200 wounded on Thursday when a refrigerated truck packed with explosives blew up in a crowded market in Sadr City, a Shi'ite district in northeastern Baghdad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X