ரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்!?
இன்று ஹவுடி மோடி விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
டெக்ஸாஸ்: இன்று ஹவுடி மோடி விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஹவுடி மோடி, இந்த ஒரு வார்த்தைதான் தற்போது அமெரிக்காவின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா இன்று மாலை நடக்க உள்ளது.
அமெரிக்காவில் உள்ள 50000 இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இந்த விழாவில் பேச உள்ளார். இந்த விழாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி என்ன
பிரதமர் மோடி இன்று மாலை அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த அறிவுப்புகள் சிலவற்றை வெளியிட போகிறார். அதேபோல் அமெரிக்காவின் பொருட்கள் சிலவற்றிற்கு இறக்குமதி வரியை குறைக்க இருக்கிறார். முக்கியமாக ஆட்டோமொபைல் பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க உள்ளார்.

எப்படி முடியும்
அமெரிக்காவின் பொருட்களுக்கு இந்தியா அதிகமாக இறக்குமதி வரி விதிக்கிறது என்று ஏற்கனவே புகார் வைக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் இது தொடர்பாக ஏற்கனவே நிறைய முறை டிவிட் செய்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பல மாதங்களாக இந்த பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை இன்று பிரதமர் மோடி சரி செய்வார் என்று கூறுகிறார்கள்.

அதே மாதிரி
அதேபோல் டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிடுவார் என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும். விசா அல்லது குடியுரிமை தொடர்பான கொள்கை குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

என்ன சலுகை
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவில் பிரதமர் மோடி ஒரு வாரம் இருக்க போகிறார். இரண்டு நாட்டு தலைவர்களும் இன்று என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிட போகிறார்கள். இன்று என்ன நடக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளது.
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications