டிரம்பின் வரியால் பிரச்சனை கிடையாது.. ஆனா இந்தியா இதை செய்யனும்! நிபுணர்கள் அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி காரணமாக பல்வேறு நாடுகள் அதிருப்தியில் இருக்கின்றன. இந்தியாவுக்கும் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வரி சில கோணங்களில் பார்க்கும்போது நமக்கு சாதகமாக இருப்பதாகவும், அதை பயன்படுத்திக்கொள்ள சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆசிய நாடுகளில் நமக்குதான் வரி குறைவு. இதனால் என்ன லாபம்? வரியை நமக்கான வாய்ப்பாக எப்படி மாற்றிக்கொள்வது? என்பது பற்றி நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

Trump Asia trade China

ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 8 வரை அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10% பொது வரி விதிக்கப்படும் என்றும், ஏப்ரல் 9 முதல் சார்ந்த பரஸ்பர (Reciprocal) வரிகள் அமலுக்கு வரும் என்றும், இதில் பார்மா துறை, செமிகண்டக்டர், காப்பர் மற்றும் எரிசக்தி துறை உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த வரியின் நோக்கம் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதுதான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

1. சீனா: 32%
2. தைவான்: 32%
3. ஐரோப்பிய ஒன்றியம்: 20%
4. இந்தியா: 26%
5. ஜப்பான்: 24%
6. வியட்நாம்: 46%
7. தாய்லாந்து: 26%
8. பிரிட்டன்: 10%

என வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி சற்று அதிகமாக தெரிந்தாலும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வரியின் அளவு குறைவுதான்.

சீனா - 54%
வியட்நாம் - 46%
பங்களாதேஷ் - 37%
தாய்லாந்து - 36%

ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு வெறும் 26%தான் வரி போடப்பட்டிருக்கிறது. இந்த வரியால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் நம்மால் வரியை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதல் விஷயம் ஆடை உற்பத்தி. இதில் சீனா (54%) மற்றும் பங்களாதேஷ் (37%) என வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் ஆடை உற்பத்தியில் இந்தியாவை விட சிறந்து இருக்கின்றன. ஆனால், என்ன பிரயோஜனம்? அதான் வரி போட்டுவிட்டாரே! எனவே நாம் நம்முடைய ஆடை உற்பத்தியை நவீனப்படுத்தி அதை ஏற்றுமதி செய்ய தொடங்கினால் அமெரிக்காவில் இந்திய தயாரிப்பு ஆடைகளுக்கு நல்ல மசுவு கிடைக்கும்.

இரண்டாவது விஷயம் மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள். சீனா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு போட்டியாக இந்த துறையில் இருக்கின்றன. ஆனால் அதிக வரி காரணமாக இனி இந்த நாடுகளின் தயாரிப்புகள் அமெரிக்காவில் கல்லா கட்டாது. இது இந்தியாவுக்கு அற்புதமான வாய்ப்பு. PLI (Production-Linked Incentive) திட்டங்கள் காரணமாக Apple, Samsung போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. இதை அப்படியே நூல் பிடித்துக்கொண்டால் நம்மால் தப்பித்துவிட முடியும்.

மூன்றாவது விஷயம் செமிகண்டக்டர் தொழில். இந்தியா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இந்த துறையில் கெத்து கிடையாதுதான். ஆனால் இதில் கொடிகட்டி பறக்கும் தைவானுக்கு 32% வரி இருக்கிறது. எனவே குறைந்த தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்ட செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் சோதனை செயல்முறைகளை அதிகப்படுத்தி உற்பத்தியை வேகப்படுத்தினால் நமக்கான வாய்ப்பை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஆட்டோ மொபைல் பாகங்கள் மற்றும் பொம்மை உற்பத்தி துறை இதில் நான்காவதாகவும். இந்த துறையில் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் கெத்து. இருப்பினும் மற்ற மூன்று துறைகளை போல இந்த துறையிலும் இந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி இந்தியா அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்ததால் வரியின் பாதிப்பிலிருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும்.

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அதைப் பயன்படுத்துவது சுலபமல்ல என்று சர்வதேச வர்த்தகத்தை பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான 'Global Trade Research Initiative' தெரிவித்திருக்கிறது. உற்பத்தி அளவினை அதிகரிக்கப்பது, மதிப்பு சேர்க்கையை உயர்த்துவது, தொழில்துறை சீர்திருத்தங்கள், சிக்கலற்ற விதிமுறைகள், வரி சலுகைகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நீடித்த கொள்கை ஆகியவை அமெரிக்காவின் வரி பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றும் என்று இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+