அமெரிக்கா-சீனா மோதல்.. இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன? நமக்கு சான்ஸ் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கா-சீனா மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்பு சில இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்புடன் (ASEAN) வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இருப்பினும் இதிலும் சில சிக்கல்கள் இருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Trump China trade

வணிக ஒப்பந்தம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு என்பது 10 நாடுகளை கொண்டதாகும். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூணை, மியான்மார், லாவோஸ் மற்றும் கம்போடியா இதுதான் இந்த 10 நாடுகள். இந்த நாடுகளுடன் கடந்த 2009ம் ஆண்டு இந்தியா பொருளாதாரம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தத்தை போட்டிருந்தது. இதற்கு பெயர் 'வணிக மற்றும் பொருளாதார ஒப்பந்தம்' (FTA - Free Trade Agreement) என்பதாகும்.

வர்த்தக இழப்பு

ஒப்பந்தத்தின் மூலம் தென்கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது. அந்த நாடுகளும் நமக்கும் வரிச்சலுகைகளை கொடுத்தது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அங்கிருந்துதான் நிறைய பொருட்கள் இங்கே வருகிறதே தவிர, இங்கிருந்து பெருசா ஏற்றுமதி ஆன மாதிரி தெரியவில்லை. குறிப்பாக, 2022-23 நிதியாண்டில், இந்தியா ASEAN நாடுகளுக்கு $44 பில்லியன் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தது. ஆனால் அங்கிருந்து $87.6 பில்லியன் அளவுக்கு பொருட்கள் இறக்குமதி ஆகின. இதனால் $43.6 பில்லியன் வர்த்தக இழப்பு ஏற்பட்டது.

இந்த 10 நாடுகளிடம் இவ்வளவு பலம் இருக்காதே! எப்படி இது சாத்தியமாகியது? என்று கேள்வி எழுந்தது. இதனை ஆய்வு செய்தபோது 'restamp' என்கிற மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடியில் சீனா

அதாவது, சீனாவிலிருந்து லைட்டர் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சிவகாசியில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படும். எனவே சீன லைட்டருக்கு தடை போட்டு இருக்கிறோம். ஆனால், இந்தோனேசியாவிலிருந்து லைட்டர்கள் நம்மூரில் அதிகம் புழங்குகிறது. சீன நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழிற்சாலையை வைத்து அங்கிருந்து இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இப்படி செய்வதன் மூலம் நம்மால் தடை விதிக்க முடியாது. மட்டுமல்லாது சில வரி சலுகைகளையும் வழங்குவோம்.

ஏனெனில் இந்தோனேசியாதான் FTA ஒப்பந்தத்தின் கீழ் வருகிறதே. இப்படி ஒவ்வொரு பொருளும் இந்தியாவில் பெயர் மாற்றி விற்கப்படுகிறது. இதற்கு பெயர்தான் 'restamp'.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

எனவே இந்தியா தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான FTA ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தவும் முடியும். நமக்கு இருக்கும் வாய்ப்பு இதுதான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நம்ம கதை ஓகே. ஆனால், அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் என்னதான் பிரச்சனை? ஏன் அமெரிக்கா இவ்வளவு கடுப்பாக இருக்கிறது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கும் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அமெரிக்கா-சீனா பஞ்சாயத்து

தென்கிழக்க ஆசிய நாடுகள் வழியாக சீனா இந்தியாவுக்கு என்ன செய்ததோ, அதையேதான் அமெரிக்காவுக்கும் செய்திருக்கிறது. இதனால் அமெரிக்கா வர்த்தக இழப்பை எதிர்கொண்டிருக்கிறது.

கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா சீனாவுக்கு $439 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால் இறக்குமதி அதிகம். இதனால் இழப்பு மட்டும் $295 பில்லியன். கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவின் மொத்த வர்த்தக இழப்பு $882 பில்லியனில் இருந்து $1.2 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், சீனா $300 பில்லியனில் இருந்து $823 பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தை உயர்த்தியிருக்கிறது. கொஞ்சம் விட்டால் 1 டிரில்லியனை தொட்டுவிடும். எனவேதான் அமெரிக்கா சீனா மீது 34% வரியை அறிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+