கனடாவுடன் இனி பேச்சே இல்லை.. 7 நாள்ல நாங்க யார்னு காட்டுறோம்.. அதிரடியாக அறிவித்த டிரம்ப்!
வாஷிங்டன்: கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்காக கனடா செலுத்த வேண்டிய வரி விகிதங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் அமெரிக்கா வெளியிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கனடாவின் டிஜிட்டல் சேவை வரி, அமேசான், கூகுள், மெட்டா, உபர் மற்றும் ஏர்பிஎன்பி போன்ற முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பாதிக்க உள்ளது. கனடாவைச் சேர்ந்த பயனர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் 3% வரி விதிக்கிறது.
ஜூன் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த வரி, 2022 முதல் பின்னோக்கிப் பொருந்தும். இதனால் அமெரிக்க ஜாம்பவான்களான அமேசான், கூகுள், மெட்டா, ஏர்பிஎன்பி ஆகியவை திங்கள்கிழமை முதல் பணம் செலுத்தத் தொடங்க வேண்டும். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். கனடா அமெரிக்கா மீது அப்பட்டமான வரி தாக்குதல் நடத்துவதாக விமர்சித்துள்ளார் டிரம்ப்.
"பல ஆண்டுகளாக பால் பொருட்கள் மீது விவசாயிகளிடம் 400% வரை வரி விதித்து வரும் கனடா, வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடாக இருக்கிறது. இப்போது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது கனடா. இது நமது நாட்டின் மீதான நேரடியான அப்பட்டமான தாக்குதல்.
கனடா, ஐரோப்பிய யூனியனை நகல் எடுத்து மிக மோசமான வரியை விதிக்கிறது. இந்த மோசமான வரி விதிப்பின் காரணமாக கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் நாங்கள் இதன்மூலம் நிறுத்துகிறோம், உடனடியாக இது அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்காக கனடா செலுத்த வேண்டிய வரியை அடுத்த ஏழு நாட்களுக்குள் நாங்கள் தெரிவிப்போம்." என்று டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த தொடர்ச்சியான வரிகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications