ஈரான் மீது மீண்டும் குண்டு மழை.. நடுவானில் டிரம்ப் கொடுத்த முக்கிய வார்னிங்
ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவு மீண்டும் தீவிரமான கட்டத்தை எட்டும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஈரான் அரசு, ஹார்முஸ்-ஐ திறந்துள்ளது பெரிய நம்பிக்கை கொடுத்தாலும்..
அமெரிக்க கடற்படை பிளாக்கேட் நீக்காவிட்டால் ஹார்முஸ் திரும்பவும் மூடப்படும் என கூறியது, டிரம்ப்-ன் அறிவிப்புகள் அனைத்தும் பொய் என ஈரான் தலைவர் கூறியது என அடுத்தடுத்து ஈரான் தரப்பில் இருந்து வரும் பதில்கள் இரு நாடுகள் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தையில் கடுமையான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்தார். இதில் டிரம்ப் கூறிய பதில்கள் பார்க்கும் போது ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நீடிக்குமா அல்லது மீண்டும் தாக்குதல் தொடங்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஈரான் போர்
ஈரானுடன் ஏற்படுத்தியிருக்கும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் (ceasefire) குறித்து கேட்கப்பட்ட போது, டிரம்ப் தெளிவான பதிலை வழங்கவில்லை. அமைதி ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் இறுதி செய்யப்படாவிட்டால், போர் நிறுத்தத்தை நீட்டிப்பாரா என்ற செய்தியாளர் கேள்விக்கு டிரம்ப், "எனக்கு தெரியவில்லை, ஒருவேளை நீட்டிக்காமல் இருக்கலாம்" என்று பதிலளித்தார்.
அதே நேரத்தில், "தேவையானால் மீண்டும் ஈரான் மீது குண்டு வீச்சு தொடங்க வேண்டியிருக்கும்" என்றும் தெரிவித்தார். மேலும், "47 ஆண்டுகளாக ஈரானுடன் அமெரிக்கா பல வகையில் போராடி வருகிறது; ஆனால் இனி அது முடியாது" என்றும் பதில் அளித்தார்.
டிரம்ப்-ன் இந்த கருத்துக்கள், ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி முயற்சிகள் இன்னும் உறுதியான நிலையை அடையவில்லை என்பதைக் காட்டுகிறது. இது முதலீட்டாளர்கள் மற்றும் உலக சந்தைகளில் அச்சத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணமாக மாறியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை
உலக எரிபொருள் போக்குவரத்திலும், வர்த்தகத்திலும் மிக முக்கியமான பாதையாக உள்ள ஹார்முஸ் நீரிணை-யில் ஈரான் இனி வரும் நாட்களில் கட்டணத்தை வசூலிக்குமா என்ற செய்தியாளர் கேள்விக்கு, டிரம்ப் தெளிவான நிலைப்பாட்டை கூறினார். அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் எந்தவித கட்டணங்களையும் அல்லது கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று டிரம்ப் கூறினார்.
"ஹார்முஸ்-ல் கட்டணங்கள் எதுவும் இருக்காது" என்ற அவரது பதில், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரமாக தொடர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை காட்டுகிறது. ஆனால் ஈரான் அமைதி பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட 10 அம்ச திட்டத்தில் கட்டண வசூல் முறை முக்கிய பாயின்ட் ஆக ஈரான் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், டிரம்ப்-ன் இந்த நிலைப்பாடு இரு நாடுகள் மத்தியிலான 2வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை எப்படியிருக்க போகிறது என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
உலக பொருளாதாரம்
இந்த போர் பதற்றம் வெறும் இரு நாடுகளுக்குள் மட்டுமல்ல, உலக பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக எரிபொருள் விலைகள் உயர்வு, கடல் வர்த்தக பாதைகள் பாதிப்பு, முதலீட்டாளர் முதலீடுகள் குறைவு ஆகிய காரணங்களால், உலக சந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடன் இந்த சூழ்நிலையை கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications