பற்றி எரிந்த 68 மாடி டிரம்ப் டவர்.. அமெரிக்க அதிபருக்கு நேரம் சரியில்லயோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தீ பிடித்து எறிந்த ட்ரம்பின் 68 மாடி ட்ரம்ப் டவர்- வீடியோ

  நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இது போதாத காலம் போல. வரிசையாக அவருக்கு எதிராக நிறைய சம்பவங்கள் நடந்து வருகிறது.

  சில நாட்களுக்கு முன்பு அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு அவர் கட்சியிலேயே ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவரைப் பற்றி 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்ற புத்தகம் வெளியே வந்து வைரல் ஆனது.

  தற்போது டிரம்பிற்கு சொந்தமான 'டிரம்ப் டவர்' என்ற பெரிய கட்டிடம் தீ விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் அந்த கட்டிடம் மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

  டிரம்ப்

  அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சொந்தமான 'டிரம்ப் டவர்' நியூயார்க்கின் மேன் ஹாட்டான் பகுதியில் இருக்கிறது. டிரம்ப் தொழிலதிபர் என்பதால் இந்த கட்டிடத்தை தன்னுடைய நிறுவனங்களின் தலைமையகமாக வைத்து இருக்கிறார். இந்த டவர் மொத்தமாக 68 மாடிகள் கொண்டதாகும்.

  பற்றி எரிகிறது

  இந்த டவர் நேற்று இரவு தீ பிடித்து எரிந்துள்ளது. மொட்டை மாடியில் இந்த தீ உருவாகி இருக்கிறது. இதில் 3 பேருக்கு மோசமாக காயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

  பிரச்சனை என்ன

  இதுகுறித்து அமெரிக்காவின் நிர்வாக துணை அதிபரும், டிரம்ப்பின் மருமகனுமான எரிக் டிரம்ப் தனது டிவிட்டரில் ''டிரம்ப் டவரின் குளிர் செய்யும் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீ வேகமாக அணைக்கப்பட்டது. ஹீரோ போல செயல்பட்ட தீ அணைப்பு வீரர்களுக்கு நன்றி.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  நெருங்கிய சொந்தம்

  டிரம்பின் நெருக்கமான சொந்தங்கள் பலர் அந்த கட்டிடத்தில் இருக்கிறார்கள். அது அலுவலகமாக இருந்தாலும் மிக முக்கியமான நபர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இந்த விபத்து குறித்த செய்திகள் இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Trump Tower has got fire yesterday. Three workers were injured in this fire. Executive Vice President Eric Trump says ''There was a small electrical fire in a cooling tower on the roof of Trump Tower. The New York Fire Department was here within minutes and did an incredible job. The men and women of the #FDNY are true heroes and deserve our most sincere thanks and praise!'' in twitter.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற