நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 7.3ஆக பதிவு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி நாடான நியூசிலாந்து நாடு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று. இந்நிலையில், தற்போது நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,

நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அந்நாடு முழுவதும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்லாந்து நகருக்குக் கிழக்கே சுமார் 412 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் நில அதிர்வு நிறுவனம் இந்த பூகம்பத்தை "கடுமையானது" என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டிற்குச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாலையில் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் தற்போது சுனாமி எச்சரிக்கையை நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என்றும் அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே உள்ள கிஸ்போர்ன் நகரில் மட்டும் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நகரின் மேயர் ரெஹெட் ஸ்டோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது தவிர இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்தின் எந்தப் பகுதியும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications