For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானைத் தாக்கிய சுனாமி- ராட்சத அலைகளில் சிக்கி 12 பேர் பரிதாப பலி

Google Oneindia Tamil News

டோக்கியோ: சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பினால் ஜப்பானில் கடுமையான சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் ஆழமாக இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது. ஜப்பான் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

சிலி நாட்டில் தலைநகர் சாண்டியாகோவில் கடந்த 16 ஆம் தேதி 8.3 ரிக்டரில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. அதில் 11 பேர் உயிரிழந்தனர்.

Tsunami Waves Reach Japan After Deadly Magnitude-8.3 Earthquake Rocks Chile

கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் தாக்கம் சிலி மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலித்தது.

ஜப்பானில் வட கிழக்கு கடற்கரை பகுதியில் குஜி என்ற பகுதி உள்ளது. அங்கு 12 க்கும் மேற்பட்ட சுனாமி அலைகள் தாக்கின. அங்கு 80 சென்டி மீட்டர் அளவுக்கு ஒரு பெரிய அலையும் மற்ற பகுதிகளில் சிறிய அலைகளும் தாக்கின.

முன்னதாக கடற்கரை யோரம் வாழும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரத்தில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து மக்கள் சாரை சாரையாக வெளியேறினார்கள். இந்த சுனாமி அலைகள் தாக்குதலால் கிட்டதட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Small tsunami waves reached the Japanese coast Friday morning, one day after a magnitude 8.3 earthquake struck offshore Chile and killed at least 12 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X