நேட்டோவில் சேர்க்க கூடாது! பின்லாந்து ஸ்வீடனுக்கு எதிராக கிளம்பும் துருக்கி! எர்டோகன் கூறும் காரணம்?
இஸ்தான்புல் : ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைக்கக் கூடாது என்றும், ஸ்காண்டிநேவிய நாடுகள் சட்டவிரோதமாக போராடி வரும் குர்திஷ் போராளிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்த நிலையில், ரஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மேற்கத்திய நாடுகளுக்கும் கடும் அழுத்தம் கொடுத்தது.
இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க இதுவும் நேட்டோ அமைப்பில் சேருவதும் ஒரு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், போர் தொடங்கிய பின்னரும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை.

துருக்கி அதிபர்
இந்நிலையில் உக்ரைனை போலவே ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை நேட்டோ அமைப்பில் சேர்க்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல நாடுகள் ஆதரவு கரம் நீட்டினாலும், துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம் துருக்கி மீது பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் குர்தீஷ் போராளிகளுக்கு இரு நாடுகளும் ஆயுதம் உள்ளிட்ட உதவிகள் வழங்குவதாக தொடர்ந்து துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போருக்கு பிறகும் இரு நாடுகளையும் நேட்டோவில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

நேட்டோ அமைப்பு
இந்நிலையில் ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைக்கக் கூடாது என்றும், ஸ்காண்டிநேவிய நாடுகள் சட்டவிரோதமாக போராடி வரும் குர்திஷ் போராளிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கூறியுள்ளார். மேலும், துருக்கியின் முன்னாள் ஆட்சியாளர்கள் 1952ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்க்க பச்சைக் கொடி காட்டி தவறு செய்துவிட்டனர் என்றும், மீண்டும் அதுபோன்ற தவறை தாங்கள் செய்ய தயாராக இல்லை என்று கூறினார்.

அதிபர் எர்டோகன்
இஸ்தான்புல்லில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எர்டோகன் கூறுகையில், ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை நேட்டோ அமைப்பில் சேர்ப்பது குறித்து தங்களிடம் நேர்மறையான கருத்து இல்லை. அந்த இரு ஸ்காண்டிநேவிய நாடுகள் பயங்கரவாத அமைப்புகளுக்கான விருந்தினர் மாளிகை போன்று செயல்படுகின்றனர். கடந்த ஆண்டுகளைப் போல நாங்கள் இந்தப் பிரச்சினையில் இரண்டாவது முறையாக தவறைச் செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

கடும் எதிர்ப்பு
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் தீவிர இடதுசாரி புரட்சிகர மக்கள் விடுதலைக் கட்சி-முன்னணி ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஸ்காண்டிநேவிய நாடுகள் அடைக்கலம் அளிப்பதாகவும் எர்டோகன் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்னதாகவே பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நீண்ட காலமாக நேட்டோவுடன் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன, இதனால் நேட்டோவில் விரைவில் சேர முடியும் என்று இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.

உக்ரைனுக்கு உதவி
இந்நிலையில் ஏற்கனவே நேட்டோ உறுப்பினராக உள்ள துருக்கி உக்ரைனுக்கு ஆளில்லா போர் விமானங்களை வழங்கியுள்ளது. ஆனால் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் அந்நாடு ஒதுங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பின்லாந்து மற்றும் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.