பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் வீடு அருகே தற்கொலைப் படை தாக்குதல்: 22 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்பின் லாகூர் வீட்டருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் போலீசார் உள்பட 22 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்பின் வீடு லாகூரில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அர்பா கரிம் டவருக்கு வெளியே இன்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

Twenty two killed, 30 injured in Lahore blast near Punjab CM's residence

இந்த தற்கொலைப் படை தாக்குதல் போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக லாகூர் போலீஸின் தலைமை அதிகாரி அமின் வெய்ன்ஸ் தெரிவித்தார். இந்த தாக்குதலில் 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Minor girl was abducted in Pakistan and converted to Islam-Oneindia Tamil

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீசாரும், லாகூர் நகராட்சி நிர்வாகமும் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An explosion killed 20 people and injured 30 in the Pakistani city of Lahore, near the residence of Chief Minister Shahbaz Sharif, on Monday, rescue officials said. It was not clear what caused the blast.
Please Wait while comments are loading...