சீனாவில் இருந்து வந்த 2 விமானம்.. என்னங்க இது?.. ஆபத்து.. சோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு ஷாக்!
பெய்ஜிங்: சீனாவில் இருந்து இத்தாலிக்கு வந்த இரண்டு விமானங்களில் இருந்த பயணிகளை சோதனை செய்து பார்த்த இத்தாலி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
சீனாவில் கொரோனா கேஸ்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. சீனாவில் சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24.8 கோடி பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனா பாதிப்பு
இதனால் சீனாவில் பரவுவது ஓமிக்ரான் வைரஸ்தான். ஆனால் ஓமிக்ரானிலேயே லேசாக மாற்றம் அடைந்த கிளை வகையான BA5.2 மற்றும் BF.7 சீனாவில் அதிகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் ஓமிக்ரானின் 130 வகையான கிளை வைரஸ்கள் பரவி வருகிறது. சீனா தற்போது தினசரி கொரோனா கேஸ் அப்டேட்களை வெளியிடுவதை நிறுத்துவிட்டது. இந்த ஓமிக்ரான் கிளை வைரஸ் சீனாவையே முடக்கி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் பரவும் இந்த அதிக அளவு கேஸ்களால் புதிய வகை கொரோனா உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட ஏரியாவிற்கு ஏரியா 1 லட்சம் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதற்கு காரணம் உள்ளது. ஜீரோ கோவிட் விதிகள் காரணமாக முதல் மூன்று அலைகளில் பலருக்கு கொரோனா ஏற்படவில்லை. அப்போது தப்பித்தவர்கள் யாருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி இல்லை.

இத்தாலி
இந்த நிலையில் சீனாவில் பரவும் கொரோனாவால் உலக நாடுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு விதி முறைகளை கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் கூட வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. இத்தாலி போன்ற நாடுகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பயணிகள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 2020ல் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி.

இத்தாலி கொரோனா
இத்தாலியில் ஏற்பட்ட கொரோனா கேஸ்கள் காரணமாக அந்த நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது . முக்கியமாக சுற்றுலா துறையை நம்பி இருக்கும் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் கொரோனா காரணமாக இத்தாலியில் பழைய மாதிரி நிலைமை ஏற்பட கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் நேற்று சீனாவில் இருந்து இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு வந்த இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் சோதனை செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி
இதில் முதல் விமானத்தில் வந்த 92 பயணிகளில் 35 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். அதேபோல் இரண்டாவது விமானத்தில் 120 பயணிகளில் 62 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. என்ன வகையான கொரோனா இவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா விமானம் போல இவர்கள் சீனாவில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இந்த விமானத்தில் வந்த மற்றவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இரண்டு விமானத்தில் இத்தனை கொரோனா நோயாளிகள் வந்ததால் இத்தாலி அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இனி வரும் சீன விமானங்களை கடுமையாக சோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications