For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை.. அமெரிக்காவில் பரபரப்பு! இந்தியா தப்புமா?

லெக்கின்ஸ் அணிந்து வந்த 2 இளம் பெண்களை அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் தடை விதித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நியூயார்க்: லெக்கின்ஸ் எனப்படும் இறுக்கமான பேண்டை அணிந்து கொண்டு அமெரிக்க விமானத்தில் பயணம் செய்த இரு இளம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் டென்வரில் இருந்து மின்னெ பொலீஸ் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்ய 2 இளம் பெண்கள் வந்தனர். அப்போது அவர்கள் இறுக்கமான பேண்டை அணிந்திருந்தனர்.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வேறு உடை இருந்தால் மாற்றிக் கொள்ளுமாறும் அல்லது அதன் மேல் அணிந்து கொள்ளுமாறும் கூறப்பட்ட போதிலும் அவர்களிடம் வேறு ஆடைகள் இல்லாததால் அந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

மற்றொரு பெண்ணுக்கு அனுமதி

மற்றொரு பெண்ணுக்கு அனுமதி

இதே போன்று லெக்கின்ஸ் அணிந்து கொண்டு வந்த மற்றொரு இளம் பெண்ணும் தடுத்து நிறுத்தப்பட்டார். எனினும் அவரிடம் மாற்று ஆடை இருந்ததால் அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

விளக்கம்

விளக்கம்

இந்த சம்பவத்துக்கு சக பயணிகள் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு விமானத்தின் ஏஜெண்ட் தெரிவிக்கையில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செருப்பு அணியாவிட்டாலும்...

செருப்பு அணியாவிட்டாலும்...

அதேபோல் செருப்பு அணியாமல் வெறுங்காலுடனும் எங்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றார். இந்த திடீர் உத்தரவுக்கு விமான பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அமெரிக்காவிலேயே லெக்கின்ஸ் ஆடை அணிந்து பயணிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் இப்படி நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் பெண்ணிய ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அரைக்குறை ஆடை

அரைக்குறை ஆடை

வெளிநாடுகளில் பெரும்பாலான பெண்கள் அரைக்குறை ஆடைகளை அணிந்து கொண்டே பொது இடங்களுக்கு சென்று வருகின்றனர். அப்போதெல்லாம் பெண்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாமல் முழுவதும் போர்த்தப்பட்ட லெக்கின்ஸால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமா என்ன?

English summary
Two girls were barred from boarding a United Airlines flight because the girls were wearing leggings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X