எந்திரிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா.. டிரம்ப் இப்படி கவுத்துட்டாரே! பருத்தி மூட்டை குடோன் கதைதான்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரி விவகாரம் உலக வர்த்தகத்தையே சுருக்கியிருக்கிறது. இதனால் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பிலிருந்து அந்நாடு இன்னும் மீளவில்லை என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வளர்ச்சி வேண்டும் எனில் வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும். இப்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களில் வேலை வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

அதாவது அமெரிக்க டாலர் குறியீடு 99.50 என்கிற சரிவு நிலையில்தான் இருக்கிறது. 100 என்கிற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் 1.3 லட்சம் வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் உருவாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. யதார்த்தத்தில் 1.77 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின. ஆனால், மார்ச் மாதம் 1.85 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியிருந்தது. அதைவிட இது குறைவு.
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.2% என்கிற நிலையிலிருந்து மாறவில்லை. தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 62.6% என்கிற அளவில் இருக்கிறது. இதில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் ஆண்டுக்கு 3.8% என்கிற ஊதிய வளர்ச்சியிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதையெல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது முதல் காலாண்டில் வளர்ச்சி என்பது 0.3% என்கிற நிலையில்தான் இருக்கிறது. இது டாலரின் மதிப்பு மீதும் எதிரொலித்திருக்கிறது.
அதாவது டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது. இன்னும் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை. சீனாவுடனான வர்த்தக பிரச்சனை முடிவுக்கு வந்தால் இந்நிலை மாற வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் டிரம்ப், சீனாவுடன் ஒரண்டை இழுத்து வருகிறார். சீன பொருட்களுக்கு அதிக வரியை அறிவித்திருக்கிறார். இதனால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. உதாரணமாக சீன தயாரிப்பு ஆப்பிள் ஐபோன்கள், டெஸ்லா கார்கள் அமெரிக்காவுக்கு வரும்போது அதன் விலை டபுளாகியிருக்கிறது. சரிங்க, இதையெல்லாம் அமெரிக்கா தனக்காக தானே உற்பத்தி செய்துக்கொள்ளாதா? என்று கேட்க தோன்றலாம்.
அமெரிக்கா நுகர்வோர் சார்ந்த பொருளாதார நாடு. அதாவது தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே தயாரித்துக்கொள்ளாத நாடு. வெளிநாடுகளிலிருந்துதான் அங்கு பொருட்கள் வரும். இப்போது இதற்கும் வேட்டு வைப்பத்தை போல, கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதால், அமெரிக்க பங்கு சந்தை சரிந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து அந்நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications