For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை விவகாரம் : ஒளிவுமறைவற்ற, நம்பகமான விசாரணை வேண்டும் : கேமரூன் கோரிக்கை

Google Oneindia Tamil News

லண்டன்: இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப் பட்ட விவகாரத்தில் ஒளிவு மறைவற்ற, நம்பகமான அதேசம்யம் சுதந்திரமான விசாரணை வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார் இங்கிலாந்து பிரதமர் கேமரூன். அப்போது, இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதிக்குச் சென்று போரினால் பாதிக்கப் பட்டவர்களைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை வேண்டி வலியுறுத்தி வருகிறார் கேமரூன்.

இந்நிலையில், லண்டன் பத்திரிக்கை ஒன்றில் இலங்கை பிரச்சினை குறித்து எழுதியுள்ளார் கேமரூன். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது....

நிழலாடும் காட்சிகள்....

நிழலாடும் காட்சிகள்....

நான் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன.

நம்பகமான விசாரணை....

நம்பகமான விசாரணை....

முதலில், தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஐ.நா. மூலம் விசாரணை....

ஐ.நா. மூலம் விசாரணை....

அதிபர் ராஜபக்சேவை சந்தித்தபோது, அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்படாவிட்டால், நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என்று தெளிவாக கூறிவிட்டேன்.

நல்லிணக்கம் வேண்டும்....

நல்லிணக்கம் வேண்டும்....

இலங்கையில், மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். தமிழர்-சிங்களர் இடையே நல்லிணக்கம் வேண்டும்.

இலங்கைப் பயணம்....

இலங்கைப் பயணம்....

நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால்தான், அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
British Prime Minister David Cameron demanded a "transparent, credible and independent" probe into the alleged massacre of Sri Lankan Tamils, days after he pressed President Mahinda Rajapaska for an enquiry into rights violations during the final days of the civil war in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X