For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் புடின்.. அப்படியே 'ஸ்டன்' ஆன மேற்கு உலகம்.. உளவாளிகளை குழம்ப வைத்த ரஷ்யா! நடந்தது ஏன்?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் என்ன செய்கிறார்.. அவர் என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியாமல் மேற்கு உலக நாடுகள் கஷ்டப்பட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைனை இதுவரை ரஷ்யாவால் பெரிய அளவில் ஆக்கிமிக்க முடியவில்லை.

போதிய ஆயுதங்கள் இல்லாமல் ரஷ்ய படைகள் கீவ் எல்லையில் முடங்கி உள்ளன. இன்னொரு பக்கம் மரியாபோல் நகரத்தையும் கைப்பற்ற முடியாமல் ரஷ்யா கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் என்ன நினைக்கிறார் என்று தெரியாமல் மேற்கு உலக நாடுகளை சேர்ந்த உளவாளிகள் குழப்பத்தில் இருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சூடான சுவையான “ஜெலன்ஸ்கி டீ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்ட்ராங்கா இருக்குமாம் சூடான சுவையான “ஜெலன்ஸ்கி டீ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்ட்ராங்கா இருக்குமாம்

தனிமைப்படுத்தப்பட்டார்

தனிமைப்படுத்தப்பட்டார்

இந்த போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்ய அதிபர் புடின் தனிமையில்தான் அதிகம் இருக்கிறார். தனக்கு நெருக்கமான வட்டத்தை கூட அவர் சுருக்கிக்கொண்டார். அவர் மிக மிக நெருக்கமான சிலரை மட்டுமே சந்திக்கிறார் என்று பல்வேறு சர்வதேச நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்ததாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தன்னுடைய நெருக்கமான வட்டத்தை அப்படியே சுருக்கிக்கொண்டார்.

நெருக்கமான அதிகாரிகள்

நெருக்கமான அதிகாரிகள்

யாருடனும் பெரிதாக பேசுவது இல்லை. தனது முடிவுகளை, என்ன நிலைப்பாடு எடுக்க போகிறோம் என்பதை அவர் யாரிடமும் சொல்வது இல்லை. இதனால் அவர் தலைக்குள் என்ன இருக்கிறது. அவரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக மாறி உள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உளவு அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனராம். கிட்டத்தட்ட மேற்கு உலக நாடுகள் இவரின் தனிமையை பார்த்து ஸ்டன் ஆகி உள்ளது. முன்னதாக ரஷ்ய அதிபர் புடின் விரக்தியில் இருக்கலாம்.

சிஐஏ என்ன சொன்னது?

சிஐஏ என்ன சொன்னது?

போர் திட்டமிட்டபடி செல்லாத காரணத்தால் கோபத்தில் இருக்கலாம். இது அவரை மன ரீதியாக பாதித்து இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவு நிறுவனம் குறிப்பிட்டது. முன்னதாக ரஷ்ய அதிபர் புடின் கோபத்தில் இருக்கிறார், அவர் தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ எச்சரிக்கை விடுத்தது. இந்த போர் என்பது அவரின் பலநாள் திட்டம்.

ஆபத்து

ஆபத்து

அவரின் போக்கு ஆபத்தானது. உலக நாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். சோவியத் பெருமையை மீட்க வேண்டும் என்பது அவரின் பலநாள் கனவு. அவரின் தனிப்பட்ட பர்சனல் விஷயமாக இந்த போரை பார்க்கிறார். ஐரோப்பா, அமெரிக்கா மீதான அவரின் பல வருட கோபத்தை இந்த போரில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்... என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று புடின் பற்றி சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் அந்நாட்டு செனட்டர்கள் இடையே குறிப்பிட்டார்.

முடக்குவாதம்

முடக்குவாதம்

மேலும் ரஷ்ய அதிபர் புடின் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம், அவருக்கு மூளையில் சில முக்கியமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று யு.கே ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. அவருக்கு பார்கின்சன் பாதிப்பு இருக்கலாம் என்றும் டெய்லி மெயில் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பிற்கு அவர் எடுத்த மருந்து காரணமாக அவரின் மன நிலையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். அவருக்கு டிமெண்டிஷியா எனப்படும் மறதி வியாதி ஏற்பட்டு இருக்கலாம் என்று டெய்லி மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது.

 ஆனால் வெளியே தோன்றினார்

ஆனால் வெளியே தோன்றினார்

ஆனால் நேற்றுதான் மாஸ்கோ மாநாடு ஒன்றில் புடின் நேரில் கலந்து கொண்டார். மிகவும் துள்ளலான தோற்றத்தோடு அவர் மேடையில் தோன்றினார். பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நின்று கொண்டு கையசைத்தார். பேசினார். முடக்குவாதம் இருக்கும் ஒருவரால்.. மறதி இருக்கும் ஒருவரால் இப்படி வலுவான மேடையில் தோன்றி பேச முடியாது. இதனால் உண்மையில் அவருக்கு பிரச்சனை இருக்கிறதா.. இல்லை இதெல்லாம் கட்டுக்கதையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டுக்கதை

கட்டுக்கதை

அதோடு அவர் நெருங்கிய வட்டாரத்தை குறைத்துக்கொண்டு, மிகவும் சீக்ரெட்டாக இருக்கிறார் என்பதாலேயே அவர் கோபத்தில் இருக்கிறார் என்றும் சொல் முடியாது. புடின் முன்னாள் உளவாளி. இதனால் கண்டிப்பாக அவர் தனது ஒவ்வொரு மூவையும் ரகசியமாகவே செய்வார். இதன் காரணமாகவே புடின் என்ன செய்கிறார்.. அவர் என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியாமல் மேற்கு உலக நாடுகள் கஷ்டப்பட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழப்பம்

குழப்பம்

அவரின் தலைக்குள் செல்ல முடியாமல் உளவு அமைப்புகள் கஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் உளவாளி என்பதால் போர் சமயத்தில் மிகவும் ரகசியமாக முடிவுகளை எடுத்து உலக நாடுகளை புடின் குழப்பி வருகிறார். இந்த போரில் எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் ஒற்றை ஆளாக புடின் எடுக்கும் முடிவுகள்தான் என்பதால்.. போர் எந்த திசையில் செல்லும்.. புடினின் அடுத்த மூவ் என்ன என்று தெரியாமல் அமெரிக்கா.. ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் குழம்பி உள்ளன. இது ரஷ்யாவிற்கு ஒருவகையில் சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Ukraine Russia Conflict: Why western spies are struggling to get into Putin planning?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X