Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'யாருக்கெல்லாம் துப்பாக்கி வேணுமோ வந்து வாங்கிக்கோங்க..' - மக்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் அரசு

Subscribe to Oneindia Tamil

கிவி: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் சூழலில் மக்களே ஆயுதம் ஏந்தி ரஷ்யாவுக்கு எதிராக போராட தயாராகி வருகிறார்கள். உக்ரைன் அரசும் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா உள்ளிட்ட நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் இந்தியா உட்பட பல நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் அரசுக்கு ஆதரவாக மக்களே களத்தில் இறங்கியுள்ளனர். இதை உக்ரைன் அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது.

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைனில் உச்சகட்ட போர்பதற்றத்தால், பலர் அந்நாட்டு தலைநகரைவிட்டு மேற்கு எல்லை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில், 16 வயது முதல் 60 வயது வரையிலான உக்ரைன் ஆண்களை ராணுவ உதவிகளுக்காக அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டு ஆண்களுக்கு உக்ரைன் அரசு ராணுவ பயிற்சி கொடுத்தது.

அதிபர்

அதிபர்

போர் சூழல் தொடங்கியதுமே உக்ரைன் அதிபர் விளாடிமிர் செனன்ஸ்கி மக்களை தயார் படுத்தினார். போர் மூண்டிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ''யாருக்கெல்லாம் ஆயுதங்கள் வேண்டுமோ வந்து எடுத்துகொள்ளுங்கள்'' என்று அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆர்வமாக பலரும் ஆயுதம் ஏந்தி போராட தயாராகி வருகிறார்கள்.

 உக்ரேனியர்கள்

உக்ரேனியர்கள்

ரஷ்யாவுக்கு எதிராக போராட, அந்நாட்டு மக்களுக்கு உக்ரைன் அரசே ஆயுதம் தருவதாக கூறியிருக்கிறது. ஆனாலும் உக்ரேனியர்கள் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் , மற்றும் ஆயுதங்களை வாங்க ஆயுதக் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. போர் சூழல் தொடங்குவதற்கு முன் உக்ரேனியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வெளியேவர அனுமதி கிடையாது. ஆனால் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டதால், ஆயுதங்கள் வாங்க மக்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கி

துப்பாக்கி

கிவியில் உள்ள‌ துப்பாக்கி கடைகளில் AR-10 மற்றும் AR-15 தாக்குதல் துப்பாக்கிகள் போன்ற சில ஆயுதங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தெரியவருகிறது. துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கத்திகள், வெடிமருந்துகள் மற்றும் கேம்பிங் கியர் அதிகமாக‌ விற்றுத்தீர்ந்துள்ளன. உக்ரைனில் இருக்கும் ஆயுதக் கடைகள், ஏடிஎம், பெட்ரோல் பங்குகளில் கூட்டமாக மக்கள் காத்திருக்கின்றனர்.

 ஆண்கள் -பெண்கள்

ஆண்கள் -பெண்கள்

விளாடிமிர் புதின் 2014 இல் கிரிமியாவை இணைத்ததைத் தொடர்ந்து, கிழக்கில் ரஷ்யா ஆதரவுடன் ஆயுதமேந்திய எழுச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைனில் சுமார் 400,000 பேர் போர் பயிற்சி எடுத்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனால், பெரும்பாலான உக்ரேனிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், துப்பாக்கியில் எப்படி சுடுவது என்பதை பள்ளியிலேயே கற்றுக்கொள்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+