போலந்துக்கு மாற்றப்பட்ட உக்ரைன் இந்திய தூதரகம்- புதிய உதவி எண்கள் அறிவிப்பு!
வார்சா: உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்து தலைநகர் வார்சாவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களுக்கான புதிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தத்தளித்து போயினர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் சுமார் 22,500 பேர் ஆபரேஷன் கங்கா மூலம் தாயகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் 50 இந்தியர்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இவர்களில் 15 முதல் 20 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் இருந்து இந்திய தூதரகமானது போலந்து தலைநகர் வார்சாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. உக்ரைனின் கீவ் நகரில் செயல்பட்ட இந்திய தூதரகம் முதலில் லிவீவ் நகருக்கு மாற்றப்பட்டது. தற்பொது லிவீவ் நகரில் இருந்து போலந்து தலைநகர் வார்சாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. லிவீவ் நகரில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் வார்சா நகரம் உள்ளது.
இதனிடையே உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தற்போது புதிய உதவி எண்களை இந்தியர்களுக்காக வெளியிட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய இமெயில் [email protected].
24X7 மணிநேர உதவி மற்றும் வாட்ஸ் அப் எண்கள் +380933559958, +919205209802 and +917428022564.
இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications