3ம் உலக போர் தொடங்கிடுச்சா? திடீரென ஐநா படைகள் மீதே இஸ்ரேல் தாக்குதல்.. உள்ளே வரும் உலக நாடுகள்?
பெய்ரூட்: மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே லெபனானில் உள்ள ஐநா பாதுகாப்புப் படை மீது திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தக்குதலில் ஐநா வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளது. ஐநா வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முதலில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்தாண்டு தொடங்கிய இந்த போர், இப்போது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமடையும் தாக்குதல்: ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் அந்த அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவும் கடந்த மாதம் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைக் கண்டித்து ஈரானும் உள்ளே வந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரு தரப்பிற்கும் இடையே சமானத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. இருப்பினும், அதைக் கேட்காமல் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
ஐநா படை மீது தாக்குதல்: இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் லெபனானில் உள்ள ஐநா தளத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள ஐநாவின் ப்ளூ ஹெல்மெட் தளத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இருவர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐநாவுக்கு சொந்தமான கட்டிடம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. போர் சமயங்களில் ஐநா கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். இதனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலும் ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதேநேரம் ஹிஸ்புல்லா படைகள் அங்கு ஐநா கட்டிடத்திற்கு அருகில் இருந்து செயல்படுவதாகத் தகவல் கிடைத்ததாகவும் இதன் காரணமாகவே தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
உலக நாடுகள் கோபம்: இருப்பினும், இது உலக நாடுகளை ஆத்திரப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக இஸ்ரேலின் நடவடிக்கையைப் போர்க் குற்றம் என்று இத்தாலி விமர்சித்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் இஸ்ரேலில் தாக்குதலுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது..
லெபனானின் தெற்கு பகுதியில் ஐநா வீரர்கள் பலர் இருந்தனர். இங்கு ஹிஸ்புல்லா நடமாட்டம் இருப்பதால் வேறு இடத்திற்குச் செல்லுமாறு ஐநா அமைப்பை இஸ்ரேல் கடந்த வாரம் தான் கேட்டுக் கொண்டது. இருப்பினும், அதை ஏற்க ஐநா மறுத்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு லெபனானில் இப்போது சுமார் 10 ஆயிரம் ஐநா வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா சொல்வது என்ன: இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த பீரங்கி தாக்குதலில் தனது வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளதை ஐநாவும் உறுதி செய்துள்ளது. தெற்கு லெபனானின் நகுராவில் உள்ள யுனிஃபில் தலைமையகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாகவும் இதில் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஐநா வீரர்களுக்கு மோசமான காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதையும் ஐநா உறுதி செய்துள்ளது.
ஐ.நா. படையின் ஜீன்-பியெர்ரே லக்ரோய்ஸ் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா அமைதிப்படை வீரர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அங்குள்ள வீரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம்












Click it and Unblock the Notifications