இதுல மட்டும் இந்தியர்களை அடிச்சிக்கவே முடியாது.... - யூனிசெஃப் அறிக்கையை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா: புத்தாண்டு அன்று குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, 'உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 69,070 குழந்தைகள் பிறந்துள்ளது. இதன்மூலம் உலகிலேயே இந்தியா புத்தாண்டு தினத்தன்று குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா, மூன்றாம் இடத்தில் நைஜீரியா உள்ளன.

Unicef says 69thousand babies born on jan 1 in India

அதே நேரத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்த கணக்கெடுப்பில், பிறந்து 24 மணி நேரத்திற்குள்ளாக ஒரு நாளைக்கு 2600 குழந்தைகள் இறக்கின்றன என்றும், மேலும் குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்திற்குள்ளாக சுமார் 26 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Unicef has estimated that nearly 386,000 babies were born on New Year’s Day, with India heading the list with 69,070.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X