மொத்தமாக நிராகரிக்கிறோம்.. சீனாவிற்கு அமெரிக்கா போட்ட "கேட்".. தென்சீன கடலில் எதிர்பாராத திருப்பம்!
பெய்ஜிங்: தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடிய பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது, சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் அமெரிக்கா முதல்முறை இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏறத்தாழ பிரச்சனை முடிவிற்கு வந்துள்ள நிலையில், சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது.
இதனால் தென் சீன கடல் எல்லைக்கு சீனா போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. அதேபோல் சீனாவும் அங்கு ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிய மோதலுக்கு வழி வகுக்கும் என்கிறார்கள்.

கருத்து என்ன
இந்த நிலையில்தான் தற்போது தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடிய பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது, சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஸ்டேட் ஆப் செக்ரட்டரி மைக் பாம்பியோ கருத்து தெரிவித்துள்ளார். அதில், தென் சீன கடல் எல்லையில் சீனா கொண்டாடும் உரிமை எல்லாம் விதிகளுக்கு முரணானது.

முழுக்க முழுக்க தவறு
தென் சீன கடல் எல்லையில் சர்வதேச விதிப்படி சீனாவின் எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு வெளியே சீனா கொண்டாடும் உரிமை எல்லாம் தவறு. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீனாவின் கோரிக்கை தவறானது மற்றும் விதிகளுக்கு முரணானது என்று அமெரிக்கா அறிவிக்கிறது. மற்ற நாடுகள் மீது சீனாவின் அத்துமீறலை உலகம் அனுமதிக்காது.

கடல் எல்லை
கடல் எல்லை பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை இனியும் அமெரிக்கா அனுமதிக்காது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடன் நாங்கள் நிற்கிறோம். அந்த நாடுகள் எங்கள் நட்பு நாடுகள். அவர்களுக்கு உதவியாக நாங்கள் அங்கே நிற்கிறோம். அணுகு இறையாண்மை மற்றும் எல்லையை காக்க எங்கள் நட்பு நாடுகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். சர்வதேச விதிகளை சீனா மதிக்க வேண்டும்.

சரியாக பேச வேண்டும்
தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கோரிக்கை எதையும் நாங்களோ எங்களின் நட்பு நாடுகளோ ஏற்காது. அங்கே சீனா அத்துமீற நினைத்தால் அதற்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும். தென் சீன கடல் எல்லையில் சீனாதான் அத்துமீறி வருகிறது. அங்கு நாங்கள் சர்வதேச கடல் எல்லையில் மட்டுமே படைகளை குவித்து இருக்கிறோம் என்று மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

முதல்முறை இப்படி
தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் அமெரிக்கா முதல்முறை இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. அதிலும் முதல்முறை சீனாவின் கோரிக்கையை மொத்தமாக அமெரிக்கா நிராகரித்து உள்ளது. சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை நடந்து வருகிறது. இது பல வருட சண்டை ஆகும். தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து இருக்கிறது.

எல்லை சண்டை
தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம் ஆகும். இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா, பிலிப்பைன்ஸ் சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது. இங்குதான் தற்போது மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'!












Click it and Unblock the Notifications