For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரபடுத்தும் அமெரிக்கா, பிரான்ஸ்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாரீஸ் தாக்குதலை அடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 129 பேர் பலியாகினர், 352 பேர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

US, France to intensify military cooperation against IS

இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவது என்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஆஷ்டன் கார்டர் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜான் ஈவ்ஸ் லீ டிரையன் ஆகியோர் இடையே தொலைபேசி மூலம் இறுதி செய்யப்பட்டது.

இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் கூறுகையில்,

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ராணுவங்கள் தீவிர நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து இரு நாடுகளும் கூட்டாக செயல்பட உள்ளன என்றார்.

பாரீஸ் தாக்குதல் குறித்த விசாரணையில் என்ன உதவி வேண்டுமானாலும் பிரான்ஸுக்கு செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The US and France have agreed on "concrete steps" to further intensify their military cooperation on fighting the Islamic State terrorist group in the wake of the terror attacks in Paris, the Pentagon said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X