அரண்டு போன அமெரிக்கா.. சீனாவுக்கான வரியை குறைக்க திட்டம்! காரணம் இதுதான்
வாஷிங்டன்: சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களை அலட்டிக்கொள்ளாத டிரம்ப் தற்போது, வர்த்தக பாதிப்பை கணக்கில் கொண்டு வரியை குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா மீதான வரி, சர்வதேச அளவில் வர்த்தக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவுக்கு பேக் ஃபயராக மாறிவிட்டது. எனவே பிரச்சனையை சமாளிக்க டிரம்ப் வரி குறைப்பு நடவடிக்கையை ஆலோசித்து வருகிறார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரி குறைப்பு
அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகமான 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்', அமெரிக்கா வரி குறைப்பை ஆலோசித்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறது. தற்போது சீன பொருட்களுக்கு 245% அளவில் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதை 50-60%க்குள் கொண்டுவர டிரம்ப் யோசித்து வருகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமற்ற பொருட்களுக்கு மட்டும் வரியை பெரிய அளிவில் குறைத்து, தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கான வரியை 100% வரை வைத்திருக்கவும் யோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓப்பனாக பேசிய டிரம்ப்
வரி குறைப்பு தொடர்பாக ஏற்கெனவே டிரம்ப் பேசியிருந்தார். "இப்போது இருக்கும் வரிகள் நீடிக்காது. நிச்சயம் குறையும். ஆனால் இது சாத்தியப்பட வேண்டும் எனில் ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு சீனா இறங்கி வரும்போதுதான் வரி குறைப்பு சாத்தியமாகும்" என்று கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியிருந்தார். மற்ற அதிகாரிகளும் வரி குறைப்பு தொடர்பாக பேசியிருந்தனர்.
அமெரிக்க பங்கு சந்தையில் மாற்றம்
இது ஒரு பாசிட்டிவ் சைன். ஏனெனில் சர்வதேச வர்த்தகமே சீனா-அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டிருந்தன. இப்படி இருக்கையில் வரியை குறைப்பதாக டிரம்ப் பேசியிருப்பது வர்த்தகர்களுக்கு நல்ல விஷயம். எனவே அமெரிக்க பங்கு சந்தையில் வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு பிறகு S&P 500 குறியீடு 3.3% உயர்ந்துள்ளது.
அமெரிக்கா இந்த அளவுக்கு இறங்கி வர முக்கிய காரணம், பல துறைகளில் அந்நாடு இழப்பை சந்தித்திருப்பதுதான். குறிப்பாக
1. உற்பத்தி
2. மோட்டார் வாகனம்
3. ஆடைகள்/காலணிகள்
4. எலக்ட்ரானிக்ஸ்
5. வேளாண்மை
6. லாஜிஸ்டிக்ஸ்
ஆகிய துறைகள் பலத்த அடி வாங்கியிருக்கின்றன. அமெரிக்காவுக்கு தேவையான இயந்திரங்களுக்கு உதிரி பாகங்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சீன பொருட்களுக்கு வரி அதிகம் என்பதால், உதிரி பாகங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதனால் அமெரிக்க உற்பத்தி துறை பாதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு சிக்கல்
ஆடைகள் மற்றும் காலணிகளை பொறுத்தவரை சீனாதான் அமெரிக்காவுக்கு பெரிய சப்ளையர். அமெரிக்கா இறக்குமதி செய்யும் ஆடைகளில் சுமார் 25-30% வரை சீனாவிலிருந்துதான் வருகிறது. அதேபோல அமெரிக்கா இறக்குமதி செய்யும் காலணிகளில் சுமார் 60% வரை சீனாவில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் கூடுதல் வரி காரணமாக இதன் விலைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்க மக்கள் விலைவாசி உயர்வை சந்தித்திருக்கின்றனர். இப்படியே போனால் அது அரசுக்கு எதிரான கோபமாக மாறிவிடும். எனவேதான் வரியை குறைக்க டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
எலக்ட்ரானிக்ஸ், வேளாண்மை, லாஜிஸ்டிக்ஸ் என அனைத்து துறைகளிலும் இதே நிலைமைதான். இதுவே வரி குறைப்புக்கு முக்கிய காரணம். டிரம்ப்பின் செயலை பார்க்கும்போது இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என சொல்ல தோன்றுவதாக பலரும் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications