For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் சந்திப்பிலேயே செம சம்பவம்.. நன்றி தெரிவித்த புதின்.. நேருக்கு நேர் சந்திப்பு.. விளக்கிய பைடன்

Google Oneindia Tamil News

ஜெனீவா: சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புதினின் முதல் சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறுகிறது. முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

உலகில் முன்னணி வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கிட்டதட்ட அனைத்து விஷயங்களிலுமே எதிரும் புதிருமான கருத்துகளை உடையவை. இரு தரப்பினருக்கும் இடையே பெரும்பாலும் எந்த விஷயத்திலும் ஒருமித்த கருத்து இருக்காது.

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இன்று ஜெனீவாவில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

முதல் பயணம்

முதல் பயணம்

அமெரிக்காவின் 46ஆவது அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக பைடன் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்குச் சென்றுள்ளார். அதிபர் பைடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே பயணத்திலேயே ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார். உலகின் இரு பெரும் நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

Array

Array

ஆயுதக் கட்டுப்பாடு, சைபர் ஹேக்கிங், தேர்தல் தலையீடு, உக்ரைன் விவகாரம் என அனைத்திலும் முரணான கருத்துக்களையே இதுவரை இரு நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான நிலைமையைச் சற்று சீர் செய்ய இந்தச் சந்திப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புகள், அணுஆயுத குறைப்பு உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் ஜெனீவா நகரில் சந்தித்துக் கொண்டனர்.

இரு பெரும் நாடுகள்

இரு பெரும் நாடுகள்

அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் இரு பெரும் நாடுகள் எனக் குறிப்பிட்ட பைடன் நேருக்கு நேர் சந்திப்பு என்பது எப்போதும் முக்கியம் என்றும் இதில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து முடிவெடுக்க முயல்வோம் என்றார். ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், "இந்த முன்னெடுப்பதை எடுத்ததற்கு முதலில் பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. இதைத் தீர்க்க உயர்ந்த மட்டக் கூட்டம் தேவைப்பட்டது" என்றார்.

முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம்

முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம்

இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்கள் முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்ற முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்தது. இந்த சந்திப்பில் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படாது என்றே கருதுவதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ்வும், இந்தச் சந்திப்பில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்படும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்றே குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் கட்ட ஆலோசனை

இரண்டாம் கட்ட ஆலோசனை

முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. புதிய அறையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதலாக சில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். முதல் ஆலோசனைக் கூட்டத்திலிருந்த மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக மொழிபெயர்ப்பிற்காகக் கருவிகளை இரு அதிபர்களும் அணிந்துள்ளனர்.

யாரெல்லாம் உள்ளனர்

யாரெல்லாம் உள்ளனர்

அந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடனுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உள் துறைச் செயலர் டோனி பிளிங்கன் உடனிருக்கின்றனர். அதேபோல ரஷ்யா தரப்பில் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

English summary
U.S. President Joe Biden and Russian President Vladimir Putin sat down in a lakeside Geneva villa. Putin and Biden shook hands-on arrival before going inside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X