வெனிசுலா அதிபர் மீதான கோபத்தில் உச்ச நீதிமன்றம் மீது குண்டு வீசிய போலீஸ் அதிகாரி

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம் மீது ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அழைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், காவல்துறை ஹெலிகாப்டர் ஒன்று, துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிப்பு சத்தம் கேட்பதற்குமுன், நகரத்தை சுற்றி வட்டமிட்டிருந்தபடி இருந்த காட்சிகள் வெளியாயின.

ஹெலிகாப்டரை ஓட்டியதாகக் கருதப்படும் போலீஸ் அதிகாரி ஒருவர், தான் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் அரசாங்கத்தைக் குற்றம் புரிந்த அரசு என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அதிபர் மதுரோ எதிர்கொண்டு வருகிறார்.
EPA
தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அதிபர் மதுரோ எதிர்கொண்டு வருகிறார்.

வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்துவரும் நிலையில் அதிபர் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதிபர் மதுரோவின் ஆட்சி மீதான அதிகாரத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாகக் கூறி வெனிசுவேலாவில் உள்ள எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அடிக்கடி விமர்சித்து வந்துள்ளன.

பிற செய்திகள் :

BBC Tamil
English summary
Venezuela's Supreme Court has been attacked by grenades dropped from a helicopter in what President Nicolás Maduro called a "terrorist attack".
Please Wait while comments are loading...