11-11-11.. அமெரிக்காவுக்கு இது ஸ்பெஷல்... ஏன் தெரியுமா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சார்லேட், வடக்கு கரோலினா: அமெரிக்காவில் வருடா வருடம் தோறும் நவம்பர் 11, வெட்டரன்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இது போர்களில் நாட்டுக்காக உயிர்விட்ட ராணுவ வீரர்களையும் நாட்டுக்காக உழைத்து தற்போது ஓய்விலிருக்கும் ராணுவ வீரர்களையும் மரியாதை செய்யும் விதமாக நடக்கும் விழாவாகும்.

இந்த தினத்தில் முற்பகல் 11 மணியளவில் பொது இடங்களில் கூடி அமெரிக்க தேசிய கோடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இரு நிமிட மவுன அஞ்சலி செலுத்துகின்றனர்.

Veternars day celebrations in USA

இந்த வெட்டரன்ஸ் டே வரலாறு என்ன என்று புரட்டிப் பார்த்தால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கண்ணில்படுகிறது. இது 11 ஆவது மாதம் 11 ஆவது நாள் 11 மணிக்கு கொண்டாடப்படுகிறது. ஏன் தெரியுமா?. 1918 ஆம் ஆண்டு ஜெர்மனக்கும் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இடையிலான முதல் உலக போர் முடிவுற்ற நாள் நவம்பர் 11, 918 காலை 11 மணி.

இதன் காரணமாகவே அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து அந்த போரில் இறந்தவர்களை மரியாதையை செய்யும் விதமாக இந்த தினத்தை கொண்டாட அப்போதைய அதிபர் வில்சன் என்பவர் உத்தரவு பிறப்பிக்க அது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு அன்றய தினம் அணிவகுப்புகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

Veternars day celebrations in USA

சரக் சரக் சத்தத்தோடு அணிவகுப்புச் சத்தமும் அவர்களின் உற்சாக முழக்கங்களும் அந்த கொண்டாட்டத்தை அழகுபடுத்துகின்றன. கார் டிரக் பைக் போன்ற வாகன அணிவகுப்புகளும் நடந்தன. அந்த அணிவகுப்பில் அந்த அந்தந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் தங்களுடைய ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்தனர். அவர்களோடு அவர்கள் குடும்பத்தினரும் வந்து அவர்களின் பெருமையை பங்கு போட்டுக் கொண்டு ஒயிலாக அணிவகுப்பில் நடந்தனர்.

Veternars day celebrations in USA

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அன்றய தினம் ராணுவத்தில் வேலை பார்த்த முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. மியூசியம் போன்ற பொழுது போக்கு இடங்களில் அன்று அவர்களுக்கு அனுமதி இலவசம். பல உணவகங்களில் அன்று அவர்களின் குடும்பத்திற்கும் உணவுக்கு கட்டணம் கிடையாது. அதனால் ராணுவத்தில் பணியாற்றும் மற்றும் முன்னாள் படையினரின் குடும்பத்தினருக்கு இது திருவிழா போலத்தான்.

Veternars day celebrations in USA

நம்ம ஊரிலும் இப்படி தேசிய அளவில் பிரமாண்டமாக கொண்டாடலாமே!

தகவல்+படம்: Inkpena சஹாயா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US is celebrating November 11 as Veterans day every year to honor the Army men for their supreme sacrifices for the country.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற