ஈரான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்தது.. இஸ்ரேல் தலைநகர் உள்ளே பாய்ந்த ஏவுகணைகள்.. நிலைமை மோசம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஈரான் இரண்டு நாடுகளும் சரமாரியாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் உச்சம் அடைந்து உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் ஏவுகணை அட்டாக் நடத்தி உள்ளது. இதன் மூலம் 2 நாட்களில் 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல்கள், ஈரானின் அணு உலைகள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்தன. இந்த தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், 34 பேர் காயமடைந்தனர்.
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வழித் தாக்குதல்களின் பின்னணி
இன்று அதிகாலைக்குள் இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. இதனால் முக்கிய நகரங்களில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தது. வெடிப்புகளும் நிகழ்ந்தன. அமெரிக்காவின் உதவியுடன் பல ஈரான் நாட்டு ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்தது. அதே நேரத்தில் ஈரான் இரண்டாவது கட்ட தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. இஸ்ரேல் இஸ்ஃபஹானில் உள்ள முக்கியமான அணு ஆயுத உற்பத்தி நிலையத்தையும் தாக்கியது.
ஈரானில் தொடர் தாக்குதல்
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரானிய வான் பாதுகாப்பு உடனடியாகச் செயல்பட்டது. தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் உட்படப் பல நகரங்களில் வெடிப்புகள் கேட்டன. தெஹ்ரானுக்குத் தெற்கே வந்த பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. மேற்கு தெஹ்ரான் மற்றும் அருகிலுள்ள கரஜ் நகரம் ஆகியவையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளது. அவசர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானின் கோரிக்கையை ஆதரித்துள்ளன.
ஈரான் ஏவிய 100க்கும் மேற்பட்ட டிரோன்களை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது. தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 329 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: "ஈரானிடமிருந்து வரும் அச்சுறுத்தலை தோற்கடிப்பதே இஸ்ரேலின் நோக்கம். இரண்டாம் உலகப் போரின்போது யூத இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதைப்போல இனி நடக்காது. ஈரான் தனது கொடிய கரத்தை நீட்டியுள்ளது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்னரே தெரியும். ஈரான் தாக்குதல்களை தொடர்ந்து நடத்த பல வாய்ப்புகள் உள்ளன" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications