லண்டன் தாக்குதல்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்- இங்கிலாந்து மக்களுக்கு ஆறுதல்!
இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதல்கள் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'நாங்கள் உங்களோடு இருக்கிறோம்' என்று இங்கிலாந்து மக்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
லண்டன்: இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ள தீவிரவாத சம்பவங்கள் கண்டித்தக்கவை; நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று பிரிட்டன் மக்களுக்கு டிரம்ப் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத சம்பவங்களை எதிர்கொள்வதில், பிரிட்டன் மக்களுக்கு அமெரிக்கா என்றைக்குமே பக்கபலமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். லண்டன் பாலத்தில் திடீர் தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் லண்டனில் நடந்துசென்ற பாதசாரிகள் மீது தீவிரவாதிகள் சிலர் கத்தியால் குத்தியதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இதேபோன்று, போராவ் மார்க்கெட் பகுதியிலும் சில தீவிரவாதிகள், பொதுமக்களை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக, தகவல் வெளியாகியுள்ளன.
இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு சம்பவங்களும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதாக, லண்டன் போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு நிலை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Whatever the United States can do to help out in London and the U. K., we will be there - WE ARE WITH YOU. GOD BLESS!
— Donald J. Trump (@realDonaldTrump) June 3, 2017
இதுபற்றி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், ''லண்டன் உள்பட பிரிட்டனில் என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் பிரிட்டன் மக்களுக்கு, அமெரிக்கா பக்கபலமாக இருக்கும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் கடவுள் ஆசி உண்டாகட்டும்,'' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா வருவதற்கு, சில இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு தடை விதித்ததைப் போன்று, பிரிட்டனும் தடை விதிக்க முன்வர வேண்டும் என்றும், டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு இங்கிலாந்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாப் பாடகி ஏரியனா கிரேண்ட் நிகழ்ச்சியின் போது தற்கொலைப்படை நடந்தது. அதில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications