For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்தனை கிரகத்தையும் எட்டிப் பார்த்து விட்டோம்... பெரும் மகிழ்ச்சி + பெருமிதத்தில் நாசா

Google Oneindia Tamil News

நாசா: சூரியக் குடும்பத்தில் உள்ள அத்தனை கிரகத்தையும் பார்த்து விட்டோம் என்று நாசா பெருமிதத்துடன் கூறியுள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களுக்கும் விண்கலம் மூலம் போய் வந்த ஒரே நாடு அமெரிக்கா என்ற பெருமையும் அதற்குக் கிடைத்துள்ளது. புளூட்டோ பயணம் வெற்றிகரமாக அமைந்ததை நாசா விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

குத்தாட்டம் போடாத குறையாக கொண்டாட்டம்

குத்தாட்டம் போடாத குறையாக கொண்டாட்டம்

புளூட்டோவை ஆராய அனுப்பப்பட்ட நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் வெற்றிகரமாக கிரகதத்தை எட்டி கடக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். குத்தாட்டம் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உற்சாகம் கரைபுரண்டோடியது.

கடைசி

கடைசி "கிரக"ப் பிரவேசம்

சூரியக் குடும்பத்தில் இதுவரை மனித வாடை எட்டிப் பார்க்காத ஒரே கிரகமாக புளூட்டோ மட்டுமே இருந்து வந்தது. தற்போது அதற்கும் போய் விட்டான் மனிதன். இதுவே நாசாவின் உற்சாகத்திற்கு முக்கியக் காரணம்.

கிரகமாக இருந்தபோது கிளம்பியது

கிரகமாக இருந்தபோது கிளம்பியது

என்ன விசேஷம் என்றால் புளூட்டோவை கிரகமாக அங்கீகரித்திருந்த சமயத்தில் (2005) நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் புளூட்டோவுக்குக் கிளம்பிச் சென்றது. ஆனால் அது கிளம்பிப் போன அடுத்த வருடமே 2006ல், புளூட்டோவை குள்ள கிரகமாக தரம் குறைத்து விட்டனர் விஞ்ஞானிகள்.

பயங்கர வேகத்தில் கிளம்பிய முதல் மிஷன்

பயங்கர வேகத்தில் கிளம்பிய முதல் மிஷன்

நியூஹாரிஸான்ஸ் விண்கலம் பூமியிலிருந்து விண்ணுக்கு ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டபோது மணிக்கு 45,000 கிலோமீட்டர் என்ற அதி வேகத்தில் புறப்பட்டது. இதுதான் உலகிலேயே அதி வேகத்தில் புறப்பட்ட முதல் மிஷன் ஆகும்.

அந்தா தெரியுது பாரு.. அதுதான் புளூட்டோ...!

அந்தா தெரியுது பாரு.. அதுதான் புளூட்டோ...!

புளூட்டோ மீது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் பறந்து கடந்தபோது அது புளூட்டோவின் தரைப்பரப்பிலிருந்து 7770 மைல் என்ற தொலைவில் இருந்தது. இதுதான் நியூஹாரிஸான்ஸ் புளூட்டோவை மிகவும் குளோசப் ஆக நெருங்கிய தூரம் ஆகும்.

அமெரிக்காவுக்குப் பெருமை

அமெரிக்காவுக்குப் பெருமை

அமெரிக்கா சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களையும் ஆராய்ந்து விட்டது. அது போகாத ஒரே கிரகமாக புளூட்டோ மட்டுமே இருந்தது. தற்போது அதையும் எட்டிப் பார்த்து விட்டது.

ரொம்ப சந்தோஷமா இருக்கு

ரொம்ப சந்தோஷமா இருக்கு

இந்தத் திட்டம் வெற்றி பெற்றது குறித்து திட்ட மேலாளர் ஆலன் ஸ்டெர்ன் கூறுகையில், மிகவும் சந்தோஷமாக உள்ளது. பல நூறு பேரின் உழைப்பு இதில் உள்ளது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, நாசாவுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்குக் கிடைத்த பெருமை இது.

கென்னிட ஆரம்பித்து வைத்த கதை

கென்னிட ஆரம்பித்து வைத்த கதை

கென்னடி அதிபராக இருந்தபோது சூரியக் குடும்பத்தை முழுமையாக ஆராயும் திட்டம் தொடங்கியது. இப்போது ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் கடைசிக் கிரகதத்தையும் அமெரிக்கா தொட்டுப் பார்த்துள்ளது என்றார்.

நிச்சயம் இது பெரும் சாதனைதான்.. நாளை புளுட்டோவின் பிரமிக்க வைக்கும் புதுப் புதுப் படங்கள் வந்து குவியப் போகின்றன.. மனிதர்களுக்கு இனிமேல்தான் பெரிய வான வேடிக்கை காத்திருக்கிறது.

English summary
Cheers, whoops and flag waving broke out at Nasa’s New Horizons control centre as scientists celebrated the spacecraft’s dramatic flyby of Pluto, considered the last unexplored world in the solar system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X