For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அட்டாக்".. பிரிட்டன் கடற்படை தளத்தில் குண்டு போடுவோம்.. ரஷ்யா பரபரப்பு எச்சரிக்கை.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கருங்கடலில் இருக்கும் பிரிட்டனின் கடற்படை தளங்களை குண்டு போட்டு தாக்குவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அரசியலில் இது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது.

இந்த கருங்கடலில் யாருக்கும் ஆதிக்கம் அதிகம் என்பதில் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் கடல் எல்லையில் கடற்படை தளங்களையும் அமைத்து உள்ளது.

கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம் கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்

கடற்படையை

கடற்படையை

இந்த நிலையில்தான் கருங்கடலில் இருக்கும் பிரிட்டனின் கடற்படை தளங்களை குண்டு போட்டு தாக்குவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் கடல் பகுதிக்குள் பிரிட்டனின் கப்பல் வந்ததாக ரஷ்யா தெரிவிக்கிறது. இன்னொரு முறை கடற்படை கப்பல் வந்தால் குண்டு போட்டு உடனே தாக்குவோம் என்று ரஷ்யா தெரிவிக்கிறது.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டனின் Royal Navy destroyer Defender என்ற போர் கப்பல் இங்கே ரோந்து பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது ரஷ்ய எல்லைக்குள் பிரிட்டன் கப்பல் சென்றுள்ளதாக ரஷ்யா கூறுகிறது. இந்த கப்பல் உள்ளே வந்ததும் நாங்கள் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வார்னிங் தாக்குதலை நடத்தினோம்.

வானம்

வானம்

வானத்தை நோக்கி குண்டுகளால் சுட்டோம். பிரிட்டன் இன்னொரு முறை ரஷ்ய எல்லைக்குள் வந்தால் கப்பலை நேரடியாக தாக்கி அழிப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு ரஷ்யாவிற்கான பிரிட்டன் தூதரை அழைத்து ரஷ்யா கடும் எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறது.

Recommended Video

    Putin-க்கு சைலென்டாக எச்சரிக்கை விடுத்த Biden
    பிரிட்டன்

    பிரிட்டன்

    ஆனால் பிரிட்டன் இதை மறுத்துள்ளது. எங்களை நோக்கி வார்னிங் ஷாட் எதுவும் போடப்படவில்லை. அதோடு, நாங்கள் ரஷ்ய எல்லைக்குள் செல்லவில்லை. நாங்கள் ரோந்து சென்றது சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்ட உக்ரைனின் எல்லையில்தான். ரஷ்ய எல்லையை நாங்கள் கடக்கவில்லை. உக்ரைன் எல்லையில் மட்டுமே ரோந்து பணிகளை மேற்கொண்டோம்.

    உக்ரைன்

    உக்ரைன்

    ரஷ்யா தவறான தகவல்களை தருகிறது என்று பிரிட்டன் கூறி வருகிறது. ரஷ்யா உக்ரைன் இரண்டு நாடுகளும் கிரீமியா அருகே இருக்கும் கருங்கடல் பகுதியை சொந்த கொண்டாடி வருகிறது. இந்த பகுதியை ரஷ்யா சொந்தம் கொண்டாடினாலும் அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கிரீமியா கடல் பகுதி உக்ரைனுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது.

    English summary
    We will bomb Britain Navy Vessels If the cross borders warn Russia on Black Sea dispute
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X