For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்ம ஊரில் பூந்திக்கு அலைவார்கள்.. இங்கோ திமிங்கலத்தின் வாந்திக்கு அலை பாய்கிறார்கள்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் திமிங்கலத்தின் ஒரு கிலோ எடையுள்ள வாந்தி ரூ. 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இதனால் அங்குள்ள கடற்கரை ஓரங்களில் திமிங்கலத்தின் வாந்தியைத் தேடி மக்கள் அலைந்து வருகின்றனர்.

கடலில் வாழும் மற்ற உயிரினங்களை உணவாகக் கொண்டு உயிர் வாழ்கிறது திமிங்கலங்கள். சில சமயங்கலில் கூர்மையான முட்களை உடைய சில உயிரினங்களும் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சென்று விடுவதுண்டு. அத்தகைய சமயங்களில் அந்த உயிரினங்களால் திமிங்கலத்தின் குடலுக்கு ஆபத்து ஏற்பட்டு விடாமல் இருக்க அதன் குடலில் அம்பர்கிரிஸ் என்ற வஸ்து சுரக்கிறது.

இந்த வஸ்துவைப் பின்னர் திமிங்கலம் வாந்தியாக வெளியே துப்பி விடும். பல நாட்கள் கடல் அலைகளால் தள்ளப்பட்டு, எப்போதாவது இந்த ஆம்பர் கரை ஒதுங்கும்.

அப்போது இதனை சேகரித்து ஏலம் விடுவர். இந்த ஆம்பரில் இருந்து ஏராளமான வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் படுவதால், அதற்கு கிராக்கி அதிகம்.

கடந்த வாரம், இங்கிலாந்து கடற்கரை ஒன்றில் தனது நாயுடன் வாக்கிங் சென்ற நபர் ஒருவர், கறுப்பாக பாறை போல் கரை ஒதுங்கிய ஆம்பரைக் கண்டெடுத்தார். சுமார் 2.2 கிலோ எடையிருந்த அந்த ஆம்பரை, அவர் லண்டன் ஏலக்கடைக்கு எடுத்துச் சென்றார். அந்த ஆம்பர் ரூ. 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப் பட்டது.

இதனை கேள்விப்பட்ட மக்கள், திமிங்கலத்தின் வாந்தியைத் தேடி கடற்கரைகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

English summary
A dog walker on a North Wales beach recently happened across a smelly chunk of ambergris, also known as “whale vomit.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X