இஸ்ரேல் உளவுத்துறை ஸ்கெட்ச்.. லெபனானில் வெடித்த 5000 பேஜர்களும் தைவான் வழங்கியது தான்! என்ன நடந்தது?
பெய்ரூட்: ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5000 பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். 2750 பேர் காயமடைந்துள்ள நிலையில் 100 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில் தான் அந்த பேஜர்கள் அனைத்தும் தைவான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா இறக்குமதி செய்ததும், அந்த பேஜர்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்’ திட்டமிட்டு வெடிக்க செய்ததும் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. இதில் பாலஸ்தீனத்தில் காசா எனும் பகுதி உள்ளது. இங்கு ஹமாஸ் எனும் அமைப்பு ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம்தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்கினர். மேலும் இஸ்ரேலுக்கு நுழைந்து 200க்கும் அதிகமானவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை தொடங்கினர். காசாவில் குண்டுகள் வீசப்பட்டது.
தற்போது காசாவிற்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. அதேவேளையில் காசா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் கூறி வருகிறது. ஆனால் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது. அடுத்த மாதம் 7 ம் தேதி வந்தால் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறும்.
சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்தில்.. டமாரென வெடித்து சிதறிய பேஜர்கள்! ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்?
ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் இடையே பிரச்சனை உள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருவது ஈரானை கோபப்படுத்தி உள்ளது. இருநாடுகளும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் நிலையில் ஈரான் சார்பில் காசா மீதான இஸ்ரேலின் போரை தடுக்க அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஈரான் தொடர்ந்து இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
ஈரான் நேரடியாக இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக லெபனான் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. இதனால் லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று ஒரே நேரத்தில் லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்து சிதறின. லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியே சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுத கும்பல் வைத்திருந்த பேஜர்களும் வெடித்து சிதறியுள்ளன. மொத்தமாக 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்து சிதறியுள்ளன.
துப்பாக்கி பட ஷூட்டிங் பாணியில்.. ஒரே நேரத்தில் வெடித்த பேஜர்கள்.. ஹிஸ்புல்லாவை கதற விட்ட இஸ்ரேல்
இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 2,750 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த பேஜர் வெடிப்புக்கு ஈரான் நாட்டுக்கான லெபனான் தூதர் முஜிதாபா அமானி என்பவர் காயமடைந்ததாகவும், லெபனான் நாடாளுமன்றத்தின் ஹிஸ்புல்லா பிரதிநிதியான அலி அமாவின் மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே இஸ்ரேல் டெக்னாலஜி துறையில் முன்னணியில் உள்ளது. இதனால் செல்போன் வைத்து இஸ்ரேலுக்கு எதிராக திட்டங்களை போட்டால் அதனை இஸ்ரேலால் கண்டுபிடித்து விட முடியும் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது பேஜர் வெடிப்பு நடந்துள்ளது. இதற்கிடையே தான் இந்த பேஜர் வெடிப்பின் பின்னணி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் பெரிய சதி.. உள்ளே இருந்த வெடிப்பொருள்! லெபனானில் 5000 பேஜர்கள் வெடித்தது எப்படி? பகீர்
அதாவது நேற்று வெடித்த 5,000 பேஜர்களும் தைவான் நாட்டில் இருந்து வாங்கப்பட்டதாகும். தைவான் தலைநகர் தைபேயில் செயல்பட்டு வரும் கோல்ட் அப்போலோ நிறுவனம் தான் இந்த பேஜர்களை தயாரித்து வழங்கி உள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்த நிறுவனம் சார்பில் AP 924 வகையை சேர்ந்த 5,000 பேஜர்கள் வழங்கப்பட்டன. இந்த பேஜர்கள் தான் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துள்ளன.
பேஜர் வெடிப்பின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்று லெபனான் சந்தேகம் எழுப்பிய நிலையில் அது உறுதியாகி உள்ளது. அதாவது தைவான் வழங்கிய பேஜர்களின் பேட்டரி பகுதியில் 3 கிராம் அளவிலான PETN (pentaerythritol tetranitrate) வெடிப்பொருட்களை இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‛மொசாட்’ வைத்ததும், நேற்று குறியீடுகளுடன் கூடிய மெசேஜ் அனுப்பியபோது அனைத்து பேஜர்களும் வெடித்துள்ளதாகவும் லெபனான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பொருட்கள் பேஜரின் உள்ளே வைக்கப்பட்டது எப்படி? என்பது தெரியவில்லை. இருப்பினும் தைவான் நிறுவனத்தின் ஆதரவு இன்றி இதனை இஸ்ரேலின் ‛மொசாட்’ அமைப்பால் செய்திருக்க முடியாது என பலரும் நினைக்கின்றனர். இதனால் இந்த விஷயத்தில் தைவானின் கோல்ட் அப்போலோ நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளதா? என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி தற்போது வரை இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை சார்பில் இருந்து மறுப்போ, விளக்கமும் தரப்படவில்லை. அதேபோல் பேஜர் வழங்கிய தைவானின் கோல்ட் அப்போலோ நிறுவனமும் எந்த விளக்கத்தையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications