போர் வந்தால், சீனாவை தாக்குப் பிடிக்குமா தைவான்? இரு நாடுகளின் படை பலம் என்ன தெரியுமா? முழு விவரம்
தைபே: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி தைவான் சென்றுள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தைவானின் வான்பரப்பில் சீனா 21 போர் விமானங்களை பறக்கவிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் அங்கு போர் மேகங்கள் திரளும் சூழல் உருவாகி உள்ளது. ஒருவேளை போர் ஏற்பட்டால் சீனாவின் தாக்குதலுக்கு முன்பு தைவான் தாக்குப்பிடிக்குமா? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
Recommended Video
தைவான் தனிநாடாக செயல்பட சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் ஒரு பகுதியாக தைவான் உள்ளதாக அந்நாடு கூறி வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுசி தைவான் செல்வதாக அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

திரளும் போர் மேகங்கள்
இருப்பினும் எதிர்ப்பை மீறி நான்சி பெலுசி நேற்று மலேசியாவில் இருந்து அமெரிக்க விமானப்படையில் விமானம் மூலம் தைவான் தலைநகர் தைபே நகருக்கு சென்றார். இதையடுத்து சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்தன. போருக்கு தயாராகும் வகையில் இந்த விமானங்கள் பறந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நான்சி பெலுசியின் பாதுகாப்புக்காக ஜப்பான் ராணுவ தளங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 13 அமெரிக்க விமானப்படை விமானங்கள் தைபே நகர் நோக்கி பறந்தன. இதனால் தைவானில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு படை வீரர்கள் எவ்வளவு?
ஒருவேளை சீனா-தைவான் இடையே போர் ஏற்பட்டாதால் சீனாவின் தாக்குதலை தைவான் தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை இருநாட்டின் படைபலங்கள் அடிப்படையில் பார்க்கலாம். சீனாவில் மொத்தம் 20 லட்சத்து 35 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர். இதில் ராணுவ வீரர்களாக 9 லட்சத்து 65 ஆயிரம் பேர் ராணுவ வீரர்களாகவும், 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கடற்படையிலும், 3 லட்சத்து 95 ஆயிரம் பேர் விமானப்படையிம் பணி செய்கின்றனர். மேலும் 5 லட்சத்த 10 ஆயிரம் பேர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர். ஆனால் தைவானில் மொத்த படைவீரர்கள் 1.69 லட்சம் பேர் தான். இதில் ராணுவத்தில் 94 ஆயிரம் பேரும், கடற்படையில் 40 ஆயிரம் பேரும், விமானப்படையில் 35 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இருப்பினும் ரிசர்வ் வீரர்களாக 16 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர்.

விமானம், கப்பல்கள் எவ்வளவு?
மேலும் தளவாடங்களை பொறுத்தமட்டில் சீனாவிடம், 5,400 ராணுவ வாகனங்கள் (டேங்குகள்) உள்ளன. 3,227 க்கும் அதிகமான விமானங்களும், 59 நீர்மூழ்கி கப்பல்களும், 86 கடற்படை கப்பல்களும் உள்ளன. மேலும், சீனாவிடம் 9,834 பீரங்கி குண்டுகளும் உள்ளன. அந்த வகையில் தைவானில் 650 ராணுவ வாகனங்கள் (டேங்குகள்), 504க்கும் அதிகமான விமானங்கள், 4 நீர்மூழ்கி கப்பல்கள், 26 கடற்படை கப்பல்கள், 2,093 பீரங்கிகள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் தி மிலிட்டரி பேலன்ஸ் 2022 வெளியிட்ட தகவல் அடிப்படையிலானது. இதனடிப்படையில் பார்த்தால் தைவானை விட சீனா தான் பலமானதாக உள்ளன.

அமெரிக்க உதவ வாய்ப்பு
மேலும் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக டாப் 3 இடத்தில் சீனா தான் பாதுகாப்பு பிரிவுக்கு அதிகமாக செலவிடும் என்றால் தைவான் எப்படி சீனாவின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியும். இதில் சீனாவின் கையே பலமடங்கு ஓங்கி உள்ளது. பாதுகாப்பு பிரிவில் உள்ள வீரர்கள், தளவாடங்கள் அடிப்படையில் சீனாவை ஒப்பிடும்போது தைவான் குறைந்த பலம் கொண்டுள்ளது. இருப்பினும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்பட பல வளர்ந்த நாடுகள் உள்ளன. இதனால் ஒரு வேளை போர் ஏற்பட்டால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவனுக்கு நிதி, ஆயுத உதவி வழங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அமெரிக்காவை மட்டுமே நம்பி போரை எதிர்க்கொள்ள தைவான் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

போரை விரும்பாத தைவான்
மேலும் தைவான் மக்கள் போர் சூழலை முற்றிலும் விரும்பவில்லை. இதுதொடர்பாக தைானிஸ் பப்ளிக் ஒபினியன் பவுண்டேஷன் கடந்த 2021ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தியது. சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்ளவீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு வெறும் 7 சதவீத தைவான் மக்கள் மட்டுமே போரை சந்திக்கலாம் என கூறினர். 21.1 சதவீத மக்கள் அரைகுறை மனதுடன் போருக்கு இசைவு தெரிவித்தனர். 40.6 சதவீத மக்கள் அரைகுறை மனதுடன் போரை எதிர்த்தனர். 23.7 சதவீத மக்கள் போரை உறுதியாக எதிர்த்தனர். மேலும் 7.6 சதவீத மக்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications