For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டியாங்யாங்".. சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனில்.. வெற்றிகரமாக இணைந்த 3 விண்வெளி வீரர்கள்.. பிளான் என்ன?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: விண்வெளியில் சீனா கட்டி வரும் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில் சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் 3 பேர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

Recommended Video

    Chinaவின் Tiangong space stationல் இணைந்த 3 astronauts

    விண்வெளில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனின் ஆயுள் 2024ல் முடியும் நிலையில், இதற்கு போட்டியாக சீனா விண்வெளியில் கட்டி வரும் ஆராய்ச்சி மையம்தான் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஆகும்.

    கடந்த ஏப்ரல் 29ம் தேதிதான் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தின் கோர் மாடலை சீனா விண்ணிற்கு ஏவியது. இந்த நிலையில் அங்கு சீனா மனிதர்களை அனுப்பி உள்ளது.

     செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது! செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது!

    நேற்று

    நேற்று

    நேற்று Long March-2F ராக்கெட் மூலம் சீனா இவர்களை விண்ணுக்கு அனுப்பியது. விண்ணிற்கு அனுப்பப்பட்ட 3 பேரில் 2 பேர் ராணுவத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் மூன்றும் நேற்று ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் வெற்றிகரமாக இணைந்தனர். கடந்த 5 வருடங்கள் கழித்து முதல்முறையாக சீனா இப்படி மனிதர்களை மீண்டும் விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

    விரிவாக்கம்

    விரிவாக்கம்

    இவர்கள் மூன்று பேரும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் Tianhe என்ற கோர் மாடலில் தங்கி ஆராய்ச்சிகளை செய்வார்கள். விண்வெளி ஆராய்ச்சிகள், ஸ்பேஸ் ஸ்டேஷன் விரிவாக்கம், ஸ்பேஸ் வாக் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். அடுத்தடுத்த மாதங்களில் நிறைய ஸ்பேஸ் ஸ்டேஷன் கருவிகள் விண்வெளிக்கு வர உள்ள நிலையில், அதை கோர் மாடலுடன் இணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

     ஆராய்ச்சியாளர்கள்

    ஆராய்ச்சியாளர்கள்

    இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் இந்த வருட இறுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட உள்ளனர். டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில், விண்வெளியில் 3 மாதம் இவர்கள் இருப்பார்கள். சீனாவின் மிக நீண்ட விண்வெளி திட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சீனா எடை குறைவான, கூடுதல் வசதிகள் கொண்ட புதிய வகை ஸ்பேஸ் உடையை உருவாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    உருவாக்குவார்கள்

    உருவாக்குவார்கள்

    டியாங்யாங் பூமியில் இருந்து 350-450 கிமீ உயரத்தில் மிதந்து கொண்டு இருக்கும். இது 1 லட்சம் கிலோ எடை கொண்டது. பெய்ஜிங் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேரடியாக கட்டுப்படுத்தப்படும். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கம் என்பது சீனா 1992ல் கொண்டு வந்த டியாங்யாங் திட்டத்தின் ஒரு படிநிலை ஆகும், விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக டியாங்யாங் 1, டியாங்யாங் 2 என்று கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பேஸ் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    ஆகஸ்ட்

    ஆகஸ்ட்

    இதன் ஒரு கட்டமாகவே கடந்த ஆகஸ்ட் மாதம் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷனின் மைய பகுதியை சீனா விண்ணில் நிலைநிறுத்தியது. இந்த நிலையில் அதற்கு ஆராய்ச்சியாளர்களை சீனா அனுப்பி உள்ளது. இவர்களை டியாங்யாங் மையத்தை விரிவாக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். விண்ணிற்கு அனுப்பப்பட்ட 3 பேரில் 2 பேர் ராணுவத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இன்னும் 3 ராக்கெட்டுகள் மூலம் கூடுதல் ஆராய்ச்சியாளர்கள் டியாங்யாங் ஸ்டேஷனுக்கு சீனாவில் இருந்து செல்ல உள்ளனர்.

    English summary
    Expansion and research: What the three Chinese astronauts will do in the Tiangong space station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X