"பிரேயர்" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாடிகன்: பிரேயர் பண்ணும்போதே சில சமயம் தூங்கிவிடுவேன் என போப் ஆண்டவர் கூறியுள்ளது கலகலப்பை ஏற்படுத்தியுளளது.

கேத்தலிக் டிவி2000 என்ற தொலைக்காட்சிக்கு போப் ஆண்டவர் அண்மையில் பேட்டியளித்தார். அந்த பேட்டி யூட்யூப்பில் நேற்று வெளியானது.

அதில் பல விஷயங்களை மிக ஜாலியாக போப் ஆண்டவர் பகிர்ந்து கொண்டார். அப்போது பிரேயரின் போது சில சமயம் தான் தூங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 மக்களை சந்திக்கும்போது உற்சாகம்

மக்களை சந்திக்கும்போது உற்சாகம்

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னியாஸ்திரியான புனிதர் தெரேசாவும் இதையேதான் செய்ததாகவும் போப் ஆண்டவர் குறிப்பிட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைவரான 80 வயது போப் ஆண்டவர், மக்களை சந்திக்கும் போது மிக உற்சாகமாக காணப்படுவார்.

 தலைகுனிந்து, கண்களை மூடி

தலைகுனிந்து, கண்களை மூடி

ஆனால் ஜெபத்தின் போது அவர் வெளிப்பாடு டோட்டலாக மாறி விடுகிறது. பெரும்பாலும் ஜெபத்தின் போது நீண்ட நேரம் கண்களை மூடி தலையை குனிந்தபடியே இருப்பார்.

 9 மணிக்கே தூங்கிவிடுவாராம்

9 மணிக்கே தூங்கிவிடுவாராம்

போப் ஆண்டவர் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாராம். தினமும் இரவு 9 மணிக்கு தூங்க செல்லும் போப் ஆண்டவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவாரம். பின்னர் மதிய உணவுக்குப் பின்னர் அவர் சிறு துயில் கொள்வாரம்.

 யாருக்குதான் தூக்கம் வராது

யாருக்குதான் தூக்கம் வராது

காலையில் 4 மணிக்கு எழுந்தால் யாருக்குதான் தூக்கம் வராது. அதுவும் சர்ச்போன்ற அமைதியான இடத்தில் கண்களை மூடி ஜெபம் செய்யும் போது.

 வித்தியாசமான நடைமுறை

வித்தியாசமான நடைமுறை

இருந்தாலும் பிரேயரின் போது தூங்குவேன் என போப் ஆண்டவர் வெளிப்படையாக கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே மக்களின் காலில் விழுந்து பூஜிப்பது மக்களுடன் உரையாடுவது என வித்தியாசமான நடைமுறையை அவர் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When I pray, sometimes I fall asleep, Pope said in an episode of a Catholic TV2000 television programme published Tuesday on Youtube.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற