For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களின் வெற்றியில் தான் அமெரிக்க வெற்றி உள்ளது: ஒபாமா புகழாரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பெண்கள் எப்பொழுது வெற்றி பெறுகிறார்களோ அமெரிக்கா அப்பொழுது வெற்றி பெறும் என பெண்கள் சமத்துவ நாள் அறிவிப்பில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

இரு பெண் குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்றைய தினத்தை அதாவது ஆகஸ்ட் 26ஐ பெண்களின் சமத்துவ நாள் என அறிவித்துள்ளார். இதற்கான முன்னறிவிப்பை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பெண்கள் சம வாய்ப்பினை பெற மறுக்கும் அனைத்து தடைகளையும் கிழித்தெறிய உறுதிமொழி எடுத்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

வாக்களிக்கும் உரிமை...

வாக்களிக்கும் உரிமை...

அமெரிக்க நாட்டில் கடந்த 1920ம் ஆண்டு ஆகஸ்டு 26ந்தேதி 19வது சட்ட திருத்தத்தின்படி, அந்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஓட்டளிப்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது.

அமெரிக்காவின் வெற்றி...

அமெரிக்காவின் வெற்றி...

பெண்கள் எப்பொழுது வெற்றி பெறுகிறார்களோ, அமெரிக்கா அப்பொழுது வெற்றி பெறும் என்பதை நாம் அறிவோம். பெண்களுக்கான வாய்ப்புகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றது.

திறமையான தாய்...

திறமையான தாய்...

இந்த 21வது நூற்றாண்டில், ஒரு தாய் தனது மகளை முன்னேற்றி கொண்டு வர திறமை படைத்தவராக இருக்க வேண்டும்.

முன்மாதிரியாக இருக்க வேண்டும்...

முன்மாதிரியாக இருக்க வேண்டும்...

தனது கடின உழைப்பால் எந்த விசயத்தையும் தடைகள் இன்றி செய்து முடிக்க முடியும் என்பதை செய்து தனது மகளுக்கு ஒரு முன் மாதிரியாக அவர் இருக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Asserting that success of women translate into country's success, US President Barack Obama has said that there was still more work to do and more doors of opportunity to open for them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X