குழந்தை பிறக்காமல் இருக்கனுமா? இத செய்யுங்க மக்களே.. பாகிஸ்தான் அமைச்சர் வினோத கண்டுபிடிப்பு..அடடா!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகளையும், இரவு 10.30 மணிக்கு மேல் திருமண மண்டபங்களை மூடும் உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் இரவு 8 மணிக்கு மேல் சந்தைகள் மூடப்படுவதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது குறைந்து மக்கள் தொகை உயர்வதை தடுக்க உதவுகிறது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசீப் தெரிவித்த வீடியோ நெட்டிசன்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இலங்கையை போல் நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்த நிலையில் அந்நிய செலவாணி கையிருப்பு என்பது காலியாகும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் விரைவில் இலங்கையை போன்று மோசமான நிலையை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியை பாகிஸ்தான் கேட்டுள்ளது. இது இன்னும் கிடைக்காத நிலை உள்ளது.

கரைந்த அந்நிய செலாவணி
இதனால் பாகிஸ்தான் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்நிய செலாவணி கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக சமீபத்தில் தேயிலை ஏற்றுமதி குறைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தேநீர் குடிப்படை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இன்னொரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு வெறும் ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே உள்ளதாக கூறப்படும் நிலையில் எரிபொருள் சிக்கன நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

எரிபொருள் சிக்கன உத்தரவு
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அந்நிய செலவாணியின் பெரும்பகுதி எரிபொருளுக்கு செலவிடப்படும் நிலையில் அந்த நாட்டு அரசு அதிரடியாக புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து மால், மாக்கெட், கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவற்றை இரவு 8.30 மணிக்குள் மூடிவிட வேண்டும். திருமண மண்டபங்களை 10.30 மணிக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் மின்சாரம் சேமிக்கப்படும். இந்த நடவடிக்கையிலால் ரூ.60 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வரை சேமிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அரசு அலுவலங்களில் மின்சாதனங்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூட அமைச்சரவை கூட்டத்தில் மின்விளக்கு பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதற்கு ஒரு தரப்பு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் மற்றொரு தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.

மக்கள் தொகை குறையுமாம்
இந்நிலையில் தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது நாட்டின் அந்நிய செலவாணி பற்றியும், எரிபொருள் சிக்கனத்துக்காக கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகளை இரவு 8.30 மணிக்கு மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கவாஜ ஆசிப் அளித்த பதில் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுபற்றி கவாஜா ஆசிப் கூறுகையில் இரவு 8 மணிக்கு கடைகள், சந்தைகள் மூடப்படுவதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்றார். இது நியாயமான ஒன்றாக இருந்தாலும் கூட இரவு 8 மணிக்குள் சந்தைகள் மூடப்படும் நிலையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து மக்கள் தொகை வளர்ச்சி என்பது சரியும் என்றார்.

கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்படும் அமைச்சர்
மக்கள் தொகை பற்றிய அமைச்சரின் கருத்து கேள்விக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் தான் எந்த அடிப்படையில் இப்படி கூறினேன் என்பது பற்றி அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம் அளிக்கவில்லை. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப்பை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். மக்கள்தொகை உயர்வை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அமைச்சர் வினோதமான கருத்தை கூறியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications