For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவுக்கு 2வது சக்சஸ்.. சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக் (SVA.O) தயாரித்த COVID-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ள 2வது சீன தடுப்பூசி சினோவாக் ஆகும். ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கு சீனா ஒப்புதல் வாங்கி உள்ளதால் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் அதிகம் பயன்பெற வழிவகுத்துள்ளது,.

உலக சுகாதார மையத்தின் அவசர கால பட்டியல் அனுமதி என்பது ஒரு மருந்தன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நம்பலாம் என்பதற்கான சமிக்ஞையாகும். இந்தியா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளதன் காரணமாக மருந்து விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள ஏழை நாடுகளுக்கு முக்கியமான நல்ல மாற்றம் ஆகும்.

அவசர கால அனுமதி

அவசர கால அனுமதி

உலக சுகாதார மையம் அனுமதி கொடுத்துள்ளதால் உலகளாவிய திட்டமான கோவாக்ஸில் இந்த வேக்சினுக்கு அனுமதி கிடைக்கும். சினோவாக் மருந்து தொடர்பாக வெளியான அறிக்கையில், இந்த தடுப்பூசி 18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம். 2-4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் போடலாம். வயதானவர்களுக்கு நல்ல பாதுகாப்பை தரும் என்று கூறப்பட்டது.

அனுமதி

அனுமதி

மே 5 ஆம் தேதி கூட்டத்தைத் தொடங்கிய WHO இன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, சினோவாக் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி நடைமுறைகள் குறித்த சமீபத்திய மருத்துவத் தரவை ஆய்வு செய்தது. அதன்பின்னர் அவசரகால பயன்பாட்டிற்கு சினோவாக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது,

மக்களுக்கு வழங்கப்பட்டது

மக்களுக்கு வழங்கப்பட்டது

சினோவாக் தனது தடுப்பூசியில் 600 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மே மாத இறுதிக்குள் வழங்கியதாகவும் 430 மில்லியனுக்கும் அதிகமான அளவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. தடுப்பூசி செயல்திறன் முடிவுகளை பார்த்தால் 51% தடுப்பூசி நோயினை தடுத்தது. கடுமையான பாதிப்புடன் மருத்துவனையில் சேர்வதை 00 சதவீதம் தடுத்துள்ளது என்று WHO தெரிவித்துள்ளது.

100 சதவீதம் பாதுகாப்பு

100 சதவீதம் பாதுகாப்பு

WHO இன் ஆலோசனைக் குழு நிபுணர்கள் (SAGE) முன்பு ஒரு ஆய்வு ஆவணத்தில், பல நாடுகளில் நடத்தப்பட்ட சினோவாக் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசி செயல்திறன் 51% முதல் 84% வரை இருந்தது என்று கூறியுள்ளது. இந்தோனேசியாவின் சுகாதார அமைச்சகம் மே 12 அன்று தடுப்பூசி பெற்ற 120,000 சுகாதார ஊழியர்களைப் பற்றிய ஆய்வில், நோயைத் தடுப்பதில் 94% பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறிந்தது. 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களில் COVID-19 ஐத் தடுப்பதில் இந்த தடுப்ழுசி செயல்திறன் மிக்கது என்று SAGE குழு கண்டறிந்தது, ஆனால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்த சில தரமான தகவல்கள் இல்லை.

English summary
The World Health Organization (WHO) said on Tuesday it has approved a COVID-19 vaccine made by drugmaker Sinovac Biotech (SVA.O) for emergency use listing, paving the way for a second Chinese shot to be used in poor countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X