2021ல் எப்போது கொரோனா தடுப்பு மருந்து...சவுமியா சுவாமிநாதன்...அதிர்ச்சி தகவல்!!
ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து 2021ஆம் ஆண்டின் மத்தியில் வரை பெரிய அளவில் விநியோகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் அறிஞர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''2021ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு, அல்லது மூன்றாவது காலாண்டில்தான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மருந்து கிடைக்கும்போதுதான், உலக நாடுகள் தங்களது மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை அளிக்க முடியும்.

பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூன்றாம் கட்டம் நடப்பாண்டு இறுதிக்குள் முடியாது என்பதை வைத்து இதைக் கூறுகிறேன். சிலர் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் ஆய்வு முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர். அப்படியே பார்த்தாலும் இதையடுத்து பெரிய அளவில் பில்லியன் கணக்கில் தடுப்பு மருந்தை தயாரிக்க வேண்டியது இருக்கிறது. அதுவரை, நாம் நம்பிக்கையுடனும், எதார்த்தத்துடனும் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா தயாரித்து இருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆய்வுகள் நடப்பாண்டின் இறுதியில் முடிந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஏற்கனவே பதிவு செய்து தயாரிப்பை துவக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் மருந்தும் இந்தியாவில் வரும் வாரத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே சென்னைக்கு இந்த மருந்து புனேவில் இருந்து வந்து சேர்ந்துள்ளது. புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்த மருந்தை தயாரிக்க ஆக்ஸ்போர்டு உரிமம் அளித்துள்ளது. ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில்தான் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications