மிக மோசமான பாதிப்பு..இந்திய கொரோனா வகையை 'கவலையளிக்கும் கொரோனா' வகையாக பட்டியலிட்ட உலக சுகாதார மையம்
ஜெனீவா: இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் B.1.617 என்ற உருமாறிய கொரோனா வகையைக் கவலையளிக்கும் கொரோனா வகை என தற்போது உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள B.1.617 என்ற கொரோனா வகையும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

B.1.617 கொரோனா வகை
இந்த B.1.617 கொரோனா வகையை இத்தனை காலம் உலக சுகாதார அமைப்பு 'கவனிக்கப்பட வேண்டிய கொரோனா வகை' என பட்டியலிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கொரோனா வகை வேகமாகப் பரவுவதை உறுதி செய்யும் வகையில் சில சான்றுகள் இருப்பதால் இதனைக் கவலையளிக்கும் கொரோனா வகை எனப் பட்டியலிடுவதாக உலக சுகாதார அமைப்பின் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

கவலையளிக்கும் கொரோனா கவலை
இது குறித்து மரியா வான் கெர்கோவ் கூறுகையில், தற்போதுள்ள தரவுகள் B.1.617 கொரோனா வகை வேகமாகப் பரவுவதைக் காட்டுகின்றது. மேலும் ஒருவரது உடலில் தோன்றும் ஆன்டிபாடிகளையும் இதை அழிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனாவால் சர்வதேச அளவில் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இதனைக் கவலையளிக்கும் கொரோனா வகை என பட்டியலிடுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

எப்படி வகைப்படுத்தப்படுகிறது
ஏற்கனவே பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் B.1.617 வகையைக் கவலையளிக்கும் கொரோனா வகை என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சீனாவில் 2019இல் பரவ தொடங்கிய கொரோனாவை விட அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலையளிக்கும் வகை எனப் பட்டியலிடும். அதேபோல தடுப்பூசிகளில் இருந்து தப்ப வாய்ப்புள்ள கொரோனா வகைகளும் கவலையளிக்கும் கொரோனா எனப் பட்டியலிடப்படும்.

தடுப்பூசிக்குக் கட்டுப்படுமா
அதேநேரம் இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் B.1.617 கொரோனா வகை தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாது என்பதை உறுதி செய்யும் தரவுகள் எதுவும் இல்லை என்றும் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார். இதுவரை பிரிட்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலையளிக்கும் கொரோனா வகை என பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications