For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவின் திட்டம் என்ன.. அடிக்கடி அத்துமீறல் ஏன்.. சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சில் வெளிவந்த பகீர்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவின் எல்லைப்பகுதியான லடாக்கில் அடிக்கடி அத்துமீறுவதை சீனா வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஏன் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறது என்பது குறித்து நேற்றைய சீன வெளியுறவு அமைச்சரின் பதிலை கவனித்தாலே தெரிந்துவிடும்.

Recommended Video

    எல்லையில் China அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட என்ன காரணம் ?

    ஆம், சீனாவைப் பொறுத்தவரை, இந்தியா பின்பற்றி வரும் எல்லைக்கோடு அவர்களின் எல்லை இல்லை. தன்னிச்சையாக ஒரு எல்லையை வரையறை செய்து வைத்துள்ளது. அதை எல்லையாக ஏற்க வைக்கவே அத்துமீறி வருவது அப்பட்டமாக தெரிகிறது.

    இந்தியாவும் சீனாவும் 3488 கிலோமீட்டர் நீளத்திற்கு எல்லையை பகிரந்து கொள்கின்றன. இதில் இந்திய சுதந்திரம் வாங்கிய காலம் முதலே சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பகுதி என்றால் அக்சய் சீன் பகுதிதான். லடாக் எல்லையில் உள்ள இந்த பகுதியை 1963ம் ஆண்டு போரில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டது. இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள (லடாக் பகுதி) ஷேக்ஸ்காம் பகுதியையும் பாகிஸ்தானிடம் இருந்து சீனா வாங்கி கொண்டது. வெள்ளைக்காரர்கள் வகுத்த எல்லைக்கோட்டை ஏற்க மறுத்து இந்த பகுதிகளை சீனா போரில் ஆக்கிரமித்தது.

    சீனாவின் அத்துமீறல்.. இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்த சூப்பர் பதிலடிசீனாவின் அத்துமீறல்.. இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்த சூப்பர் பதிலடி

    எல்லை பிரச்சனை

    எல்லை பிரச்சனை

    அதன்பிறகும் சீனா அமைதியாக இருக்கவிலலை. லடாக்கில் உள்ள சூமர் பகுதி, பாங்காங் சோ ஏரி, தெம்சோக் செக்டார் உள்ளிட்ட பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுமட்டுமின்றி இமாச்சல பிரதேசத்தில் உள்ள திஷிகாங்க் சிபிகி லா (Tashigang-Shipki La), உத்தரகாண்டில் உள்ள நிலாங் புலாம் சுமடா, உத்தரகாண்டில் உள்ள பாராகோட்டி, மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் தங்களுக்கு சொந்தமான பகுதி என்று உரிமை கொண்டாடி வருகிறது.

    வெடித்த மோதல்

    வெடித்த மோதல்

    இதற்காக 1975க்கு பிறகு பெரிய அளவில் மோதல்கள் வெடித்தது இல்லை. ஆனால் இந்தியா லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த பின்னர் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, சூமர் பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு எல்லை நிலைகளை மாற்றியமைக்க முயன்று வருகிறது. ஜூன் மாதம் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.. சீன தரப்பிலும் உயிரிழப்பு அதிகம் என்றாலும் வெளியே சொல்லவில்லை.

    மீண்டும் அத்துமீறல்

    மீண்டும் அத்துமீறல்

    இந்நிலையில் சில நாட்கள் அமைதியாக இருந்த சீனா, கடந்த 29ம் தேதி முதல் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. 3 முறை நடந்த அத்துமீறல் முயற்சிகளை இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்து முறியடித்தது. ஆனால் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அத்துமீறலில் ஈடுபடுவோம் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி யி.

    எல்லை வரையறை

    எல்லை வரையறை

    அவர் நேற்று இதுபற்றி கூறுகையில், "இந்தியா-சீன எல்லைகள் இன்னும் வரையறுக்கப்படாததால் இப்பிரச்சனை நீட்டிக்கத்தான் செய்யும். பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சீனா தயாராக உள்ளது. வேறுபாடுகள் மோதலாக உருவாக இடம் அளிக்க கூடாது. இருப்பினும் எந்த ஒரு சூழலிலும் சீனா முதலில் பிரச்சனையை உருவாக்காது, எல்லை மீறாது" என்றார்.

    சீன அமைச்சர் பேச்சு

    சீன அமைச்சர் பேச்சு

    இவரது பேச்சை பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக புரியும்.. எது எல்லை என்று வரையறை செய்யாத வரை பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்பதுதான். அதாவது.. நாங்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்.. எல்லையை எது என்று முடிவு செய்வோம். அப்படி எடுக்கும் முடிவின் படி நடந்து கொள்வோம் என்பது தான் இவரது பேச்சின் சாராம்சமாக உள்ளது. இப்போது இந்தியா சொல்லி வரும் வெள்ளைக்காரர்கள் வகுத்த எல்லைக்கோட்டை ஏற்க முடியாது என்பதே சீனாவின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கிடையே இந்தியா தான் தங்கள் எல்லையில் ஊடுவியது என்றும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜிரோங்க் கூறியுள்ளார்.

    English summary
    China's Ambassador Sun Weidong also pointed out that there has been no official communication from the Indian side regarding Huawei being kept out, adding that the Chinese company is ready to arrive at a "novel backdoor agreement" with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X