டி20 பைனல்ஸ் முடிஞ்சு 2 நாள் ஆச்சு.. இன்னும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் இருக்க என்ன காரணம்?
பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையை இந்திய அணி தட்டி தூக்கியுள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டி நடந்த சுமார் 2 நாட்கள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் இந்திய அணி தாயகம் திரும்பவில்லை. இந்திய அணி ஏன் தாயகம் திரும்பவில்லை. அவர்கள் இன்னும் பார்படாஸிலேயே இருக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த ஒரு மாதமாக டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடந்தது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய டி20 கோப்பையை வென்றது. கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஐசிசி டிராபியை வென்றுள்ளது.
தாயகம் திரும்பவில்லை: இதற்கிடையே கோப்பை வென்று 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்திய அணி தாயகம் திரும்பவில்லை. உலகக் கோப்பையை வென்ற ரோஹித் படையைக் கொண்டாடி வரவேற்கப் பல கோடி இந்தியர்கள் காத்திருக்கும் நிலையில், இன்னும் அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இதற்குக் காரணம் புரியாமல் பலரும் குழம்பிய நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படாஸை இப்போது புயல் தாக்கி இருக்கிறது. அதுவும் சாதாரண புயல் இல்லை.. கிரேடு 3 சூறாவளியான பெரில் (Beryl) என்ற புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு விமானச் சேவை மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்களே விரும்பினாலும் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எங்கே இருக்கிறார்கள்: இது தொடர்பாக இந்திய அணியுடன் தொடர்பில் உள்ள சிலர் ஆங்கில செய்தி நிறுவனங்களிடம் கூறுகையில், "இறுதிப் போட்டி நடந்த பார்படாஸில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் அணி இப்போது சிக்கியுள்ளது. புயல் காரணமாக அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை" என்றார்.
இந்திய அணி முதலில் பார்படாஸிலிருந்து உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8:30 மணி) கிளம்பத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், சூறாவளி காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால்.. அவர்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளது.
திட்டம் என்ன: இந்திய அணி பார்படாஸில் இருந்து நியூயார்க் சென்று அங்கிருந்து துபாய் வழியாக இந்தியா வரத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், கனமழையால் மற்றும் சூறாவளி புயலால் இந்திய அணியால் பார்படாஸில் இருந்தே புறப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்திய அணி தங்கியிருந்த ஹில்டன் கடற்கரைக்கு அருகிலேயே இந்த கிரேடு 3 சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் உள்ளூர் நேரப்படி திங்கள் அதிகாலை பார்படாஸில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளி புயல் காரணமாகவே அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு எந்தவொரு விமானங்களும் தரையிறங்க அல்லது புறப்பட அனுமதி இல்லை.
எப்போது புறப்படுவார்கள்: புயல் கரையைக் கடந்த பிறகே அங்கு என்ன நிலைமை என்பது துல்லியமாகத் தெரிய வரும். சூறாவளி ஏர்போர்ட் பகுதியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தினால் அவர்கள் கிளம்ப மேலும் தாமதமாகலாம். தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது அவர்களால் எப்போது அங்கிருந்து கிளம்ப முடியும் என்று துல்லியமாகத் தெரியவில்லை. இருப்பினும், வானிலை மிக மோசமாக இருப்பதால் அவர்கள் 36 முதல் 48 மணி நேரம் வரை அங்கேயே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications