Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா.. நேட்டோ அமைப்பில் சேர்ந்திருந்தால் உக்ரைனுக்கு இந்த நிலை வந்திருக்காதே.. ஏன் சேரவில்லை? பின்னணி

Subscribe to Oneindia Tamil

கீவ்: அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ‛நேட்டோ' பாதுகாப்பு அமைப்பில் உக்ரைன் இன்னும் இணைக்கப்படவில்லை. நேட்டோவில் இணைப்பதாக 2008ல் உறுதி அளிக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டு காலமாக உக்ரைன் தொடர்ந்து காத்திருந்து வருகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஏவுகணை, குண்டுவீச்சில் ரஷ்ய படைகள் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த போருக்கு முக்கிய காரணமாக நேட்டோ அமைப்பு பார்க்கப்படுகிறது. அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது தான் போருக்கான முழுமுதற் காரணமாக உள்ளது.

‛நேட்டோ' என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். இது 1949ல் துவங்கப்பட்டது. 2ம் உலக போருக்கு பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்ப பெற மறுத்தது. மேலும் ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் இந்த நேட்டோ அமைப்பு எனும் ராணுவ படை. இதில் பலநாட்டு ராணுவத்தினர் அங்கம் வகிப்பார்கள்.

 30 நாடுகள்

30 நாடுகள்

துவக்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், டென்மார்க் நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது நேட்டோவில் வடஅமெரிக்காவின் 2 நாடுகள் உள்பட 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை உறுப்பு நாடும் பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

 குறைந்தபட்ச தகுதிகள்

குறைந்தபட்ச தகுதிகள்

ஆனால் தற்போது வரை உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைக்கப்படாமல் உள்ளது. ஆனால் நேட்டோவை பொறுத்தமட்டில் புதிய நாடுகள் இணைவதற்கு எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும். நேட்டோவின் இணையதள விபரப்படி, "வாஷிங்டன் உடன்படிக்கையின் கொள்கைகளை மேம்படுத்துவதோடு, யூரோ-அட்லாண்டிக் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த பங்களிப்பு செய்ய தயாராக உள்ள நாடுகள் உறுப்பினராகலாம்'' என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இணைய விரும்பும் நாடுகளுக்கு சில குறைந்தபட்ச தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

அதன்படி புதிதாக இணைய உள்ள நாட்டில் சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மையுடன் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். சந்தைப்படுத்துதல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுவதோடு, ராணுவ படைகள் உறுதியாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருப்பதோடு, எல்லை வரையறைகளில் இறையாண்மையை மதித்து நடப்பதோடு, நேட்டோவோடு இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது முக்கிய அம்சங்களாக உள்ளன.

 2008ல் விண்ணப்பம்

2008ல் விண்ணப்பம்

உக்ரைனை பொறுத்தமட்டில் நேட்டோ அமைப்பில் இணைய 2008 ல் விண்ணப்பித்தது. இதனை அந்த அமைப்பில் உள்ள நாடுகள் வரவேற்றன. விரைவில் நேட்டோவில் உறுப்பினராக இணைப்பதாக உக்ரைனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் 2010ல் உக்ரைன் அதிபராக விக்டர் யானுகோவிச் தேர்வு செய்யப்பட்டார். இவர் பிற நாடுகளுடன் அணி சேர்வதில் விருப்பம் கொள்ளவில்லை. இதனால் நேட்டோவில் இணையும் உக்ரைனின் முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து 2014ல் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு துவங்க அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

 நாடுகள் எதிர்ப்பு

நாடுகள் எதிர்ப்பு

இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாக்க வேண்டுமெனில் நேட்டோவில் இணைவது தான் சரியானது என உக்ரைன் நினைத்தது. இதனால் மீண்டும் நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் உக்ரைனின் சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அங்கு அமைதி நிலவில்லை. இது பிற நாடுகளை கவலையடைய செய்தது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் செயல் கிடப்பில் போடப்பட்டது.

 புதின் மீதான அச்சம்

புதின் மீதான அச்சம்

இதுதவிர வேறு சில காரணங்களும் உக்ரைனை நேட்டோவில் இணைய விடாமல் தடுப்பதாக முன்னாள் சர்வதேச பாதுகாப்பு அதிகாரி ஸ்டான்லி ஸ்லோன் கூறியுள்ளார். அவர் கூறுகையில் "உக்ரைனில் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயக முறை கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களும் உக்ரைனை நேட்டோவில் இருந்து தள்ளி வைக்கிறது. மேலும் பல ஆண்டுகளாக நேட்டோவில் உக்ரைன் இணைய ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் பிற நாடுகள் அச்சமடைந்து உக்ரைனை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒருமித்த முடிவு மேற்கொள்ளப்படவில்லை'' என்றார்.

 அதிபர் அதிருப்தி

அதிபர் அதிருப்தி

இதுபோன்ற காரணங்களால் தான் உக்ரைன் இன்னும் நேட்டோ படையில் உறுப்பினராகவில்லை. இதனால் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பின் உதவி கிடைக்கவில்லை. இதனால் உக்ரைன் அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கி அதிருப்தியில் உள்ளார். இதுபற்றி அவர் சமீபத்தில் கூறுகையில், கூறுகையில், ‛‛உக்ரைனை நாங்களே காப்பாற்றி கொள்கிறோம். எங்கள் நாட்டை காக்க எங்களுடன் இருப்பது யார்?. உண்மையில் யாரும் எங்களுடன் இல்லை. மேலும் உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைத்து கொள்வதாக யாரும் உத்தரவாதம் அளிக்க முடியுமா. உண்மையில் அனைவரும் பயப்படுகிறார்கள்'' என நேட்டோவில் இணைய முடியாத மனவலியை கொட்டி தீர்த்தார். ஒருவேளை நேட்டோவில் உக்ரைன் இணைந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக நேட்டோ படைகள் போரிட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அப்படி நேட்டோ படைகள் வர வேண்டும் என்பது கட்டாயமில்லை.

 பின்லாந்து, ஸ்வீடன் நிலை என்ன

பின்லாந்து, ஸ்வீடன் நிலை என்ன

இது ஒருபுறம் இருக்க ஐரோப்பிய பிராந்தியத்தில் பின்லாந்து, ஸ்வீடன் நடுநிலை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் கடந்த வாரம் நடந்த நேட்டோ அவசர மாநாட்டில் இருநாடுகளும் பங்கேற்றன. மேலும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்த நாடுகளும் ராணுவ ரீதியாக நடுநிலை வகிக்கின்றன. இதன்மூலம் விதிகள்படி இந்த நாடுகளையும் நேட்டோவில் இருந்து ஒதுக்கி வைக்க முடியும். ஆனால் இறுதி முடிவுக்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

Recommended Video

    உங்க அணு ஆயுதத்தை தூக்கிட்டுப் போங்க.. America-வுக்கு Russia எச்சரிக்கை
     திடீர் மாற்றத்துக்கு காரணம்

    திடீர் மாற்றத்துக்கு காரணம்

    காலம் காலமாக பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நடுநிலை வகித்ததோடு, ரஷ்யாவுடன் நல்ல உறவில் உள்ளன. ஆனால் தற்போதைய இந்த திடீர் மாற்றத்துக்கு பின்னணியில் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தை தான் உள்ளது. அதாவது ரஷ்யாவுடன் 830 மைல் தூரம் பின்லாந்து எல்லையை பகிரந்து வருகிறது. சமீபகாலமாக ரஷ்யா ஆக்கிரமிப்பால் பின்லாந்து சிக்கலை சந்திக்கிறது. இதேபோல் ஸ்வீடனுக்கும் ரஷ்யா தலைவலியை அளிக்கிறது. இதனால் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோ நோக்கி சென்றுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+