அமெரிக்க போர் விமானங்களை இயக்கப் போகும் ‘எந்திரன்கள்’.. பென்டகன் அதிரடி திட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானங்களை ரோபோட்டுகள் மூலம் இயக்கும் அதி நவீனத் திட்டத்தை பென்டகன் தீட்டி வருகிறது. அடுத்த தலைமுறை போர் விமானங்களை ரோபோட்டுகள் மூலம் இயக்கும் சாத்தியம் குறித்து அது ஆராய்ந்து வருகிறது.
வழக்கமாக விமானங்களில் விமானியும், இணை விமானியும் இருப்பார்கள். பென்டகன் திட்டப்படி, விமானியுடன் ஒரு ரோபோட் துணை விமானியாகவும் செயல்படுமாம்.
மேலும், விமானம் தரையிறங்குவது உள்ளிட்ட பணிகளில் அது விமானிக்கு உதவியாக இருக்குமாம்.

அறிமுகம்...
அமெரிக்க கடற்படையின் எப்ஏ டபுள் எக்ஸ் ஜெட் விமானத்தில் இந்த தொழில்நுட்பத்தை பென்டகன் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் அமரிக்க விமானப்படையின் எப் எக்ஸ் போர் விமானத்திலும் இதை அறிமுகப்படுத்தவுள்ளனர்.
2030ல்...
இந்த புதிய தொழில்நுட்பம் 2030ம் ஆண்டில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
கடற்படை, விமானப்படையில்..
அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படையின் போயிங் எப்ஏ 18இ, எப் சூப்பர் ஹார்னட், லாக்ஹீட் மார்ட்டின் எப் 22 ரேப்டர் ஆகிய விமானங்களிலும் இதை பரீட்சார்த்தமாக செயல்படுத்தவுள்ளனர்.
மனித உருவில்...
இந்த ரோபோட்டுகளும் கிட்டத்தட்ட மனிதனைப் போலவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மனிதனைப் போன்ற உருவத்தையும் இதற்குக் கொடுக்கவுள்ளனர். விமானத்தில் ஏற்படும் பழுதுகளையும் இவை செயய்ப் பழக்கப்படுத்தப்படும்.
உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்...
இந்த ரோபோட்டுகளுக்கு மனிதனைப் போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனும் கற்றுத் தரப்படும். வெப்ப நிலை, காற்றின் வேகம் உள்ளிட்டவற்றை இவை உணரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றனவாம்.
சோதனை முயற்சி...
சமீபத்தில் கடற்படையின் எக் 47 பி விமானத்தில் இந்த ரோபோட்டுகளை பரீட்சார்த்தமாக செயல்படுத்திப் பார்ததனர். அப்போது அது சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
எந்திரன்...
எனவே எதிர்காலத்தில் அமெரிக்க போர்விமானம் ஒன்று பறக்கும்போது அதை செலுத்துபவர் ஜேம்ஸ் ஆகவோ அல்லது ஜான் ஆகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. அது ஏதோ ஒரு எந்திரனாகக் கூட இருக்கலாம்.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications