சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. தனக்கு தானே திருமணம் செய்த பெண், இப்போ விவாகரத்து செய்ய போகிறாராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் பிரிங்டன் என்னும் பகுதியில் வசித்து வரும் சோபியா என்ற பெண்மணி சென்ற வருடம் அவரை அவரே திருமணம் செய்து கொண்டார். உலகில் உள்ள ஆண்கள் பெண்கள் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எனக்கு என்னைத்தான் பிடித்திருக்கிறது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் "எனக்கு என்னுடன் வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. அடக்கடி சண்டை வருகிறது. அதனால் டைவஸ் செய்ய போகிறேன்'' என்று கூறி விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்.

மேலும் இவர் இவரைப் போலவே தனக்குளேயே கல்யாணம் செய்து கொண்ட ஆண் ஒருவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். தனது வாழ்க்கை குறித்த வித்தியாசமான விஷயங்களை விளக்கி இருக்கிறார்.

 தன்னையே கல்யாணம் செய்து கொள்ளுதல்

தன்னையே கல்யாணம் செய்து கொள்ளுதல்

லண்டனில் பிரிங்டன் என்னும் பகுதியில் வசித்து வரும் சோபியா என்ற பெண்மணி சென்ற வருடம் உலகின் அனைத்து செய்திகளிலும் இடம் பிடித்து பிரபலம் அடைந்தார். அப்போது 35 வயது நிரம்பி இருந்த இவர் உலகில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோரையும் வெறுத்து யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் கடைசியில் தன்னையே திருமணம் செய்து கொண்டார். இதற்காக நிஜ திருமணம் போல கோலாகலமாக அரங்கம் அமைத்து வெள்ளை நிற உடை அணிந்து தனக்கு தானே மோதிரம் மாற்றிக் கொண்டார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் வைரல் ஆக தொடங்கினர்.

 அவரைப் போல பலர்

அவரைப் போல பலர்

இதையடுத்து காதலில் விருப்பம் இல்லாத பலர் இவரைப் பின்பற்றி தனக்கு தானே திருமணம் செய்யும் முடிவை எடுத்து இருக்கின்றனர். 'சோலோகாமி' என்று அழைக்கப்படும் இந்த திருமண முறை தற்போது அங்கு மிகவும் பிரபலம் ஆகியிருக்கிறது. இந்த முறையின் மூலம் பெண்கள் மட்டும் இல்லாமல் நிறைய ஆண்களும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். இந்த திருமணம் நிஜ திருமணம் போல் நடந்தாலும் இங்கிலாந்து நாட்டில் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட முடியாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

 தன்னிடம் இருந்து விவாகரத்து

தன்னிடம் இருந்து விவாகரத்து

இந்த நிலையில் சோபியா என்ற அந்த பெண்மணி தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். அதன்படி ''தனக்கு தன்னுடன் வாழ்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும், அடிக்கடி தனக்குள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இப்படியே சண்டை போட்டால் தன்னை தானே வெறுத்துவிடுவேன்'' என்று முடிவு எடுத்து இருக்கிறார். இதையடுத்து இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தன்னை தானே விவாகரத்து செய்யும் முடிவில் இறங்கி இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பால் அவர் மீண்டும் பிரபலம் ஆகியிருக்கிறார்.

 ஆணுடன் திருமணம்

ஆணுடன் திருமணம்

இந்த நிலையில் அவர் இந்த விவாகரத்துக்கு தற்போது புதியதொரு காரணம் ஒன்றும் கூறியிருக்கிறார். அதன்படி அவர் 'ரவுரி பாராட் ' என்ற இன்னொரு ஆணுடன் காதலில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இன்னும் சில மாதங்களில் அந்த ஆணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ரவுரி பாராட் என்பவரும் சில வருடங்களுக்கு முன்பு தனக்குள்ளேயே காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவர்கள் இருவரும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டது அதிகாரபூர்வமாக செல்லாது என்பதால் இவர்களால் விவாகரத்தும் பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sophia had grabbed the headlines after an year she had married herself. But recently, she revealed on a talk show that she is going to divorce herself from herself. Also she decided to marry Ravuri Barrett, who has already married to himself.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற