Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனம் திறந்த மலாலா.. போதை தலைக்கேறியபோது.. துரத்தி தாக்குதல் நடத்திய தாலிபான்கள்.. ஞாபகம் வருதே

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்து உலக நாடுகள் கவலையை பதிவு செய்து வருகின்றன.. ஐ.நாவும் கண்டனத்தை தெரிவித்தபடியே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை பேட்டியொன்றில் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆப்கன் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.. தாலிபன்கள் அங்கு பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, பெண்கள் யாருமே வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே நடமாடக்கூடாது, ஆண்களின் துணையுடன் தான் வரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Taliban Malala Afghanistan

பெண்களுக்கு கல்வி மறுப்பு

மாணவிகளுக்கு உயர்நிலை பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டது.. தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் , பூங்காக்களிள் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல வேண்டும், அதாவது தம்பதிகள் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் பூங்காவுக்கு சேர்ந்து செல்லகூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆண் டாக்டர்களிடம் பெண்கள் சிகிச்சைக்கு செல்லக்கூடாது, விமான பயணங்களிலும் தனித்தனியாக பயணம் செய்ய வேண்டும், உயிருள்ள எதையும் போட்டோ எடுக்கக்கூடாது, அவைகளை சோஷியல் மீடியாவில் பதிவிட கூடாது, இஸ்லாமியர் அல்லாதவர்களுடன் நட்பாக பழகக்கூடாது. அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் நீள்கின்றன.

உடலுறவு

அதுமட்டுமல்ல, மனைவியாக இருந்தாலும் கூட, உடலுறவின்போது இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளக்கூடாது, பெண்களுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்க கூடாது போன்ற சட்டங்களும் அமலில் உள்ளன..

நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காகவே இப்படியான சட்டங்களை அமல்படுத்தப்பட்டிருப்பதாக தாலிபன்கள் காரணங்களை சொன்னாலும், உலக நாடுகள் இந்த கட்டுப்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியவாறே உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா யூசஃப்சாய், தாலிபன்களால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது பேட்டியொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுடப்பட்ட மலாலா

பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் பெண்கள் கல்விக்காகப் போராடியதற்காக, கடந்த 2012ல் அதாவது தன்னுடைய 15வது வயதில் பள்ளி பஸ்ஸில் பயணித்தபோது மலாலாவை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மலாலா, பிரிட்டனில் தீவிரமான சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இப்போது மலாலாவுக்கு 28 வயதாகிறது.. திருமணமாகிவிட்டது.. தன்னுடைய கணவர் அஸ்ஸர் மாலிக்கோடு இணைந்து பெண் கல்வி செயல்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்களுடன் கஞ்சா (Marijuana) உட்கொண்டபோது, 13 ஆண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய தலிபான்களின் நினைவுகள் மீண்டும் துரத்தியதாக மலாலா கூறியிருக்கிறார்.

உடம்பெல்லாம் பயம்

தி கார்டியன் பத்திரிகைக்கு மலாலா பேட்டி தந்துள்ளார்.. அதில், "ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து பாங் குழாய் மூலம் கஞ்சா புகைத்த அந்த இரவுக்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன.. என் மீதான தாக்குதலை இவ்வளவு நெருக்கமாக நான் எப்போதுமே உணர்ந்ததில்லை.அந்த தாக்குதலை நான் மீண்டும் எதிர்கொள்வது போல இருந்தது.

பஸ், துப்பாக்கி நபர், ரத்தம்.. இப்படி எல்லாவற்றையுமே முதல்முறையாகப் பார்ப்பது போல எனக்கு இருந்தது. என் உடல் முழுவதும் பயத்தில் நடுங்கியது. என் சொந்த மனதிலிருந்தே என்னால் தப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.. கஞ்சா போதையில் சுயநினைவை இழந்துவிட்டேன்.. நண்பர் ஒருவர்தான் என்னை அறைக்கு தூக்கி சென்றார்.

மனநல மருத்துவர்

அந்த சம்பவத்திற்கு பிறகுதான் எனக்கு பதட்ட தாக்குதல்கள் (Panic Attacks), தூக்கமின்மை, கடுமையான மனக்கவலைகள் வந்துவிட்டன. பிறகு ஒரு மனநல மருத்துவரை அணுகினேன்..

தலிபான் தாக்குதல், அவர்களின் ஆட்சியில் கழித்த குழந்தைப்பருவம், படிப்பு அழுத்தம் போன்றவையே இந்த மனக்காயங்களுக்குக் காரணம் என்று டாக்டர்கள் கண்டுபிடித்து சொன்னார்.. அவரது உதவியால்தான், அந்த கொடூர நினைவுகளில் இருந்து படிப்படியாக மீண்டேன். இந்த சம்பவங்கள் எல்லாம் 'Finding my way' என்ற தன்னுடைய அடுத்த புத்தகத்தில் விரிவாக எழுத போகிறேன் என்றெல்லாம் மலாலா தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+