For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”உவ்வே!!! புனுகுப்பூனை காபிதான் உலகிலேயே விலையுயர்ந்ததாம்”

Google Oneindia Tamil News

இந்தோனேஷியா: உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்பட்டால் நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை.

வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம், தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.

இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து.

காபிக்கொட்டைதான் உணவு:

காபிக்கொட்டைதான் உணவு:

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது.

புனுகுப்பூனை கழிவு:

புனுகுப்பூனை கழிவு:

இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம்.

அம்மாடியோவ்! :

அம்மாடியோவ்! :

அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

இதில கூடவா ஏமாத்துவாங்க:

இதில கூடவா ஏமாத்துவாங்க:

அதிக விலை கிடைப்பதால் தற்போது இந்த விற்பனையில் கலப்படம் மற்றும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதை தடுக்க, உண்மையான காபி கொட்டைகளை அறிவியல் முறைப்படி சோதனை செய்து கண்டு பிடித்து அங்கீகாரம் அளிக்க உள்ளனர்.

English summary
World’s costliest coffee is made in Indonesia. It’s cost is just Rs 5000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X