For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக் கோளாறால்’ மரணம்

Google Oneindia Tamil News

பாரீஸ்: உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது செயற்கை இருதயம் எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால் மரணமடைந்துள்ளார்.

பொதுவாக இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு இருதயம் வேண்டிக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகையால் உயிர் இழப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

இத்தகைய உயிர் இழப்புகளைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று செயற்கையாக இருதயம் தயாரிக்கும் முயற்சியில் இறக்கி வெற்றி பெற்றது. ஆனால், அவ்வாறு செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி மிகக் குறைந்த நாட்களிலேயே மரணமடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

World's first artificial heart patient dies

மாற்று இருதயம்...

அறிவியலின் துணை கொண்டு முன்னேறி வரும் மருத்துவத் துறையில் மாற்று இருதயம் கிடைக்கும் வரை செயற்கை இருதயத்தைத் தற்காலிகமாகப் பயன் படுத்தி வந்தன. இவற்றின் ஆயுட்காலம் சில தினங்கள் தான்.

கார்மேட் நிறுவனம்...

ஆனால், அத்தகைய செயற்கை இருதயங்களின் வாழ்நாளை அதிகப் படுத்தினால் இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் எனக் கருதிய பிரெஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் அதற்கான முயற்சியில் இறங்கியது.

வெற்றி.. வெற்றி...

அதன்படி, அந்நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18-ந்தேதி பொருத்தப்பட்டது. செயற்கை இருதயம் சிறந்த முறையில் இயங்கியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

மரணம்...

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அவரது செயற்கை இருதயம் திடீரென தனது செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 3ம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தோல்வி...

அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு வரும் என எதிர்பார்த்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது சம்பந்தப்பட்ட செயற்கை இருதயக் கம்பெனி மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
On Monday the Georges Pompidou European Hospital in Paris issued a statement, announcing the 76-year old unnamed-man fitted with the Carmat artificial heart in December had died Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X