For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் பறக்கும் டாக்ஸி... சூப்பர் வசதிகளுடன் ஜெர்மனியில் தயாரிப்பு!

Google Oneindia Tamil News

முனிச், ஜெர்மனி: உலகின் முதல் பறக்கும் டாக்ஸி சேவை ஜெர்மனியின் முனிச் நகரில் அறிமுகம் ஆகிறது. இந்த சேவை வரும் 2025ம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் லிலியம் என்ற தனியார் நிறுவனம் மத்திய முனிச் நகரில் இருந்து 20 மைல் தொலைவிற்கு அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. .

இது தொடர்பாக லிலியம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டேனியல் வீகண்ட் கூறுகையில். எங்கள் நிறுவனம் மத்திய முனிச்சிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த சேவை அறிமுகம் செய்யப்படும். இது தான் உலகின் முதல் பறக்கும் டாக்ஸியாக மாறும். பல மில்லியன் டாலர் செலவு செய்து இதை உருவாக்கி உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம் ஆகும்.

70 டாலர் கட்டணம்

70 டாலர் கட்டணம்

இந்த டாக்ஸிக்கு தி லிலியம் ப்ரோடோடைப் பறக்கும் டாக்ஸி என்று பெயரிட்டுள்ளோம். 10 நிமிடத்தில் மான்கட்டன் நகரில் இருந்து கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும்.. இதற்கு கட்டணமாக 70 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5000 ரூபாய்) வசூலிக்கப்படும்.

அரசின் ஒப்புதல்

அரசின் ஒப்புதல்

தற்போது சோதனை முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த சேவையை இயக்குவதற்காக ஜெர்மனி அரசின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் இயக்குவோம்.

 300 கி.மீ பறக்கும்

300 கி.மீ பறக்கும்

லிலியம் பறக்கும் டாக்ஸி பேட்டரியில் இயக்கக்கூடிய வகையில் தயாரித்துள்ளோம். ஒருமுறை சார்ஜ் ஏற்றப்பட்டால் சுமார் 186 மைல்கள் ( 300 கிலோமீட்டர்) பறக்கும். இதன் அதிகபட்சவேகம் மணிக்கு 196 கிலோமீட்டர் ஆகும்" என்றார்.

பல நிறுவனங்கள்

பல நிறுவனங்கள்

இதனிடையே பறக்கும் டாக்ஸி சேவையை ஆரம்பிக்கும் முனைப்பில் உலகில் 20 நிறுவனங்கள் முதன்மையாக உள்ளன. மோர்கன் ஸ்டெய்ன்லி நிறுவனம் இத்திட்டத்தின் கீழ் 850 பில்லியன் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

லாரி பேஜ்

லாரி பேஜ்

கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜ், கூகுளின் பொறியாளர்களால் நடத்தப்படும் கிட்டி ஹாக் என்ற நிறுவனத்துக்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வருகிறார்.போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவை பறக்கும் கார் திட்டத்திற்கான பணிகளில் இறங்கி உள்ளன.

வாகன உற்பத்தியாளர்கள்

வாகன உற்பத்தியாளர்கள்

டைம்லர், டொயோட்டா, போர்ஷே உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்கள் இந்தத் துறையில் முதலீடு செய்கின்றனர். ஏர் டாக்ஸி சேவையை உருவாக்கி வரும் உபேர்,. ஆஸ்திரேலியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் மெல்போர்னில் 2023 க்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

English summary
world's first flying taxi: Germany based Lillium Building, may ride with in five years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X